டாடா நிதிக் குழும முன்னாள் எம்.டி திலீப் பென்ட்சே தற்கொலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : டாடா நிதிக்குழும முன்னாள் நிர்வாக இயக்குனர் திலீப் பெண்ட்சே தனது அலுவலக அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 61 வயது பெண்ட்சே, கடந்த 2001ம் அண்டு டாடா குழுமத்தால் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சட்டவிரோதமான பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் திலீப் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு மும்பையின் கிழக்கு தாதரில் உள்ள அவரது அலுவலக அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் திலீப்பின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திலீப் பென்ட்சேவின் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Former Tata finance MD Dilip Pendse found self hanged

தொடரும் தற்கொலைகள்

கடந்த 2013 மற்றும் 2014ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் கார்ல் சைலம் மற்றும் டாடா ஸ்டீலின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் சாரு தேஷ்காண்டேவும் இதே போன்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2014ல் நிர்வாக இயக்குனர் தற்கொலை

அமெரிக்காவைச் சேர்ந்த சைலம் தற்கொலை செய்து கொண்ட போது அவர் டாடா மோட்டார்ஸின் செயல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்தார். 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் பேங்காக்கில் உள்ள விடுதியறையில் இருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மனைவியுடன் தகராறு

ஆனால் மனைவியுடனான குடும்பப் பிரச்னை காரணமாகவே சைலம் தற்கொலை செய்து கொண்டதாக அப்போது கூறப்பட்டது.

உயிர் விட்ட செய்தித் தொடர்பாளர் இதே போன்று டாடா ஸ்டீல் நிறுவனத்தில் செய்தித் தொடர்பாளராக இருந்த 58 வயது தேஷ்பாண்டேவும், கடந்த 2013ம் ஆண்டு ஜுன் மாதம் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

மோசடியாளர் பெண்ட்லே

இந்நிலையில் திலீப் பெண்ட்சே நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். டாடா நிதிக் குழுமத்தில் நீண்ட காலங்களாக பணியாற்றி வந்த 2003ம்

ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.2 கோடி பணத்தை சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்ததாக டெல்லியில் கைது செய்யப்பட்டார். கடந்த 2014ம் ஆண்டு பங்குச்சந்தைகளை கண்காதித்து வரும் 'செபி', பெண்ட்சே 2 ஆண்டுகளாக கேபிடல் சந்தைகளில் சட்டவிரோதமாக வர்த்தகம் செய்ததை கண்டறிந்து அவருக்கு தடை விதித்தது.

2001ல் பணிநீக்கம்

டாடா நிதிக் குழுமத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதால் கடந்த 2001ம் ஆண்டு பெண்ட்சே மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் பணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dilip Pendse was found hanged himself who dismissed from Tata Finance in 2001 after the company arm ran huge losses
Please Wait while comments are loading...