பல கெட் அப்பில் சுற்றி திரிந்த அம்ரித்பால் சிங்.. துப்பாக்கி முனையில் பைக் மாறி எஸ்கேப் ஆனது எப்படி?
மோகா : பஞ்சாப்பில் கடந்த ஒரு மாத காலமாக பல வேடங்களில் தலைமறைவாக இருந்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் அம்ரித்பால் சிங் இன்று போலீசாரிடம் சரணடைந்தார். கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் போலீசார் தேடி வந்த நிலையில், அம்ரித்பால் சிங், பஞ்சாப் மோகா காவல்துறையிடம் இன்று சரண் அடைந்தார். இதையடுத்து அசாம் மாநிலம் திப்ருகாருக்கு அம்ரித்பால் சிங் அழைத்துச் செல்லப்பட உள்ளார்.
சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் காலிஸ்தான் இயக்கங்களின் தீவிர ஆதரவாளர் அம்ரித்பால் சிங். வாரிஸ் பஞ்சாப் டி என்ற இயக்கத்தின் தலைவராக உள்ள அம்ரித்பால் சிங்குக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தப்பிய அம்ரித்பால் சிங் : அம்ரித்பாலின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து அஜ்னாலா பகுதி சிறையில் அடைத்து வைத்திருந்தனர். லவ்பிரீத் சிங்கை விடுவிக்க வலியுறுத்தி, அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் சிலர் கைகளில் வாள், துப்பாக்கிகளை ஏந்தியவாறு, அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சூறையாடி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அம்ரித்பாலை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியது.
அப்போது, ஜலந்தர் ஷாகோட் பகுதி டோல்கேட் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின்படி அம்ரித்பால் சிங் காரில் தப்பிய தகவல் வெளியானது. அதன் பின்னர் அவர் தலைப்பாகையை மாற்றி, மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பினார். லூதியானா பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பைக்கை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவர் திருடிச் சென்றது தெரியவந்தது.

மாறுவேடங்களுடன் : அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் போலீசார் எடுத்து வரும் ஆபரேஷனின் ஒரு பகுதியாக அவரது கூட்டாளிகள் மீது தொடர் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அம்ரித்பால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால், அவ்வப்போது சில சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
அம்ரித்பால் சிங், மாறுவேடத்தில் இருப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. காவல்துறையிடம் சிக்காமல் சட்டை பேன்ட் அணிந்தபடி அவர் சாலையில் குடையுடன் சுற்றித் திரிவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தன. வழக்கமாக, அவர் பாரம்பரிய சீக்கிய உடைகளைத்தான் அணிந்திருப்பார்.

சரணடைந்த அம்ரித்பால் : தலைமறைவாக இருந்த அமரித்பால் சிங்கை கடந்த 1 மாதத்துக்கும் மேலாக போலீசார் தேடி வந்த நிலையில், அண்மையில் அம்ரித்பாலின் மனைவி கிரண்தீப் கவுர் லண்டன் செல்ல முயன்றபோது, அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தான் அம்ரித்பால் சிங் தானாக முன்வந்து இன்று போலீசாரிடம் சரணடைந்துள்ளார். அவரை கைது செய்துள்ள பஞ்சாப் மோகா போலீசார் அவரை சிறையில் அடைக்கவுள்ளனர். அம்ரித்பால் சிங் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications