டெல்லியில் பயங்கரம்... கோர்ட்டுக்குள் துப்பாக்கிச் சூடு- ஒரு போலீஸ்காரர் பலி- 2 பேர் படுகாயம்!
டெல்லி: டெல்லியில் நீதிமன்றத்துக்குள் நுழைந்த கும்பல் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் போலீஸ்காரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் கிழக்குப் பகுதியில் கார்கர்டூமா நீதிமன்றத்தின் அறை எண் 73-ல் இர்பான் என்ற கைதியை இன்று முற்பகல் 11.30 மணியளவில் போலீசார் விசாரணைக்காக ஆஜர்படுத்தியிருந்தனர். அப்போது திடீரென நீதிமன்றத்துக்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் சரமாரியாக கைதி இர்பானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அப்போது இர்பானுக்கு அருகே நின்று கொண்டிருந்த ராம்குமார் என்ற போலீஸ்காரர் தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்தன. அவர் நீதிமன்ற அறைக்குள்ளேயே உயிரிழந்தார்.
கைதி இர்பான் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து டெல்லி கிழக்கு இணை ஆணையர் சஞ்சய் பேனிவால் கூறுகையில், நீதிமன்றத்துக்குள் நுழைந்த அந்த கும்பல் இர்பானை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. இர்பான் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எதிர்பாராதவிதமாக இர்பானுடன் இருந்த போலீஸ்காரர் ராம்குமாரும் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்ப முயன்ற கும்பலில் 3 பேரை போலீசார் நீதிமன்ற வளாகத்திலேயே சுற்றி வளைத்து பிடித்தனர்; மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான்.
முன்விரோதம் காரணமாக இர்பான் மீது அந்த கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications