வாட்ஸ்அப் குரூப் வழியாக ஹைடெக் விபசாரம்.. சிக்கிய தாரா ஆன்ட்டி.. கஸ்டமர்கள் கலக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாட்ஸ்-அப் வாயிலாக பெண்களின் புகைப்படங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி விபசாரம் செய்து வந்த 45 வயது பெண்மணியை உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் போலீசார் கைது செய்து உள்ளனர்.

காசியாபாத் நகரிலுள்ள சாலிமார் கார்டனில் உள்ள பிளாட்டில் தங்கியிருந்து பாலியல் தொழிலை செய்து வந்து உள்ளது அம்பலமாகியுள்ளது.

விபச்சாரத்திற்காக வாட்ஸ் - அப்பில் குரூப் ஒன்றை தொடங்கி மூன்று வருடங்களாக அதன் வாயிலாக வாடிக்கையாளர்களை சேர்த்து உள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

பலாத்கார வழக்கில் துப்பு

பலாத்கார வழக்கில் துப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, விபசாரத்தில் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியபோது, காசியாபாத்தில் தாரா என்ற பெண் விபசாரத்தை பெருமளவில் தொழிலாக செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பெண் குற்றவாளி

பெண் குற்றவாளி

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி தாராதான் என்றும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தீவிரமாக கண்காணித்து வந்த போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தாரா பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பல குரூப்புகள்

பல குரூப்புகள்

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், வாட்ஸ்-அப்பில் டெல்லியை மூன்றாக பிரித்து வாடிக்கையாளர்களுக்காக தனித்தனியாக மூன்று குரூப்பை உருவாக்கி தாரா இயக்கி வந்துள்ளார். போலீசார் தாராவின் செல்போன்களையும் பறிமுதல் செய்தபோது இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

வாடிக்கையாளர்கள் குவிந்தனர்

வாடிக்கையாளர்கள் குவிந்தனர்

ஒவ்வொரு வாட்ஸ்அப் குரூப்பிலும் சுமார் 60 முதல் 100 வரையிலான வாடிக்கையாளர்களை தாரா இணைத்து உள்ளார். இவ்விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீஸ் தேடி வருகிறது. 8 வருடங்களாக விபசாரம் செய்து வந்த தாரா கடந்த மூன்று வருடங்களாக வாட்ஸ் அப்பில் செயல்பட்டு வந்து உள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்

கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்ணை வைத்து, அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதால் அவர்கள் குடும்பத்திற்கு அஞ்சி நடுங்கிக் கொண்டுள்ளனராம். தாராவை கஸ்டமர்கள் தாரா ஆன்டி என அன்போடு அழைத்து வநத்தாக கூறுகிறார்கள் போலீசார். இருக்காதா பின்னே..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Ghaziabad police on late Thursday night arrested a 45-year-old woman, and her three male accomplices, who allegedly ran a prostitution racket.
Please Wait while comments are loading...