பாஜக ஆட்சி அமைக்க 4 சுயேட்சைகள் ஆதரவு.. கோவாவில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் பாஜக
பானாஜி: கோவாவில் பாஜக ஆட்சி அமைக்க சுயேட்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் கோவாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமையவுள்ளது.
கோவாவில் நடந்து முடிந்த 40 சட்டசபைத் தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகிறது. கோவாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது.
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு மாநில கட்சிகளும் போட்டியிட்டன.

கோவா
பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கோவா பார்வேர்டு கட்சியுடன் இணைந்து போட்டியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் 37 இடங்களிலும் கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் முதன்முறையாக களம் இறங்கி மாநில கட்சிகளுடன் களம் இறங்கி உள்ளது.

பாஜக
கோவா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 19 இடத்திலும், காங்கிரஸ் 12 இடத்திலும், திரிணாமுல் கட்சி 3 இடத்திலும், ஆம் ஆத்மி 2 இடத்திலும், சுயேட்சைகள் 4 இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு கோவாவில் தொங்கு சட்டசபை அமையும் என்றது. ஆனால் பாஜக வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறது. ஆனால் பெரும்பான்மை இல்லாமல் இருக்கிறது.

பெரும்பான்மை
கோவாவில் எந்த கட்சியும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை பெறவில்லை. பாஜக 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கோவாவில் காங்கிரஸ் 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அங்கு 40 இடங்கள் உள்ள நிலையில் பெரும்பான்மை பெற 21 இடங்கள் தேவை. ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் கட்சி பாஜகவுக்கு ஆதரவு கொடுக்காது.
Recommended Video

சுயேட்சைகள்
இந்நிலையில், கோவாவில் நான்கு இடங்களில் சுயேட்சைகள் முன்னிலையில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். பிக்லோய்ம் தொகுதியில் சந்திரகாந்த் சத்யீ, கோர்டாலிம் தொகுதி, அலிக்ஸியோ, மனுயுல் வாஸ் மற்றும் கர்டோரியம் தொகுதியில் முன்னனியில் இருக்கும் சுயேட்சைகள் தற்போது பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். இதனால் பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்துள்ளது. கோவாவில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கிறது பாஜக.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications