அரசு ஊழியர்கள் ரூ.5000க்கு மேல் பொருள் வாங்க உயரதிகாரியின் அனுமதி கட்டாயம்! உத்தரகாண்ட்டில் உத்தரவு
டேராடூன்: உத்தரகாண்டில் அரசு ஊழியர்கள் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் எந்த பொருள் வாங்கினாலும் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த உத்தரவுக்கு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரகாண்ட்டில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான், அம்மாநில அரசு ஊழியர்களின் கோபத்தை சம்பாதித்துள்ளது. இதற்கு கடந்த 14ம் தேதி உத்தரகாண்ட் அரசு போட்ட உத்தரவு தான் காரணம்.

அதாவது அரசு ஊழியர்கள் அதிகளவில் சொத்து வாங்கி குவிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாநில அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்தது. மேலும் அதுதொடர்பான அரசாணையும் வெளியிட்டுள்ளது. இதுதான் அரசு ஊழியர்களின் கோபத்துக்கு முக்கிய காரணமாகும்.
உத்தரகாண்ட் அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛எந்த அரசு ஊழியர்களாக இருந்தாலும் கூட தங்களின் ஒரு மாத ஊதியம் அல்லது ரூ. 5,000-ஐ விட அதிகமான மதிப்புள்ள எந்தவொரு அசையும் சொத்தையும் விற்பனை செய்தாலோ அல்லது சொத்து, பொருட்களை வாங்கினாலோ, அல்லது வேறு வழியில் பணப்பரிவர்த்தனை செய்தாலோ அதுபற்றி உயரதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.
மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறுை அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து விவரங்களை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அசையா சொத்துகளை தானமாக கொடுத்தாலும் அரசிடம் தெரிவிக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தான் அரசு ஊழியர்களை கோபப்படுத்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications