ஓபிஎஸ்ஸா.. சசிகலாவா.. ஆட்சி அமைக்கப் போவது யார்.. இறுதி முடிவு ஆளுநர் கையில்... மத்திய அரசு விளக்கம்
தமிழகத்தில் ஓபிஎஸ் அரசு நீடிக்குமா அல்லது சசிகலா முதல்வர் ஆவாரா என்ற முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநரிடமே உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி: தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து ஆளுநர் தக்க முடிவுகளை எடுப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் முதல்வர் ஓபிஎஸ் நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநரை சந்தித்து, தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து பேசினார். அதே போன்று சசிகலா 7.30 மணிக்கு ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஓர் அறிக்கை தயார் செய்து அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆளுநர் முடிவு எடுப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மாநில அரசியல் அமைப்பு செயல்பாட்டிற்கு ஆளுநரே தலைவர் என்று கூறியுள்ள ராஜ்நாத் சிங், ஆளுநரின் முடிவே இறுதியானது என்றும் தெரிவித்துள்ளார்.
இனி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது தெரிய வரும். அவர் கூறும் முடிவின் அடிப்படையில், ஓபிஎஸ் தொடருவாரா அல்லது சசிகலா முதல்வராக பொறுப்பேற்பாரா கேள்விக்கு விடை கிடைக்கும்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications