மேற்குவங்கத்தில் பந்த்.. கல்வீச்சில் இருந்து தப்பிக்க இந்த பஸ் டிரைவர்களின் ஐடியாவ பாருங்க மக்களே!!
மேற்குவங்கத்தில் இன்று பாஜக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
Recommended Video

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் இன்று பாஜக 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மீறி இயங்கும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் உள்ள உயர்நிலை பள்ளியில் வரலாறு மற்றும் கணிதம் ஆசிரியர்கள் இடம் காலியாக இருக்கும் போது உருதுக்கு மட்டும் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனைக் கண்டித்து மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினர், மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பாஜக பந்த்
இதில் ஏபிவிபி அமைப்பின் தலைவர் ராஜேஸ் சர்க்கார் உள்பட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து பாஜக முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

பாஜக அழைப்பு
12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்தது. இதனால் கொல்கத்தா, கூச்பிகார் உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
|
கண்ணாடிகள் சேதம்
ஒரு சில இடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் மீது பாஜகவினர் கற்களை வீசி தாக்கினர். இதனால் பேருந்துகளில் கண்ணாடிகள் நொறுங்கின.

ஹெல்மெட்
கூச்பிகார் பகுதியில் அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை இயக்கினர்.
|
பாதுகாப்பு
அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முழு அடைப்பில் ஈடுபடுவோர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கைது
இதனிடையே ஹவுராவில் பாஜகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் கடைகளை மூடுமாறு உரிமையாளர்களிடம் பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications