For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும்

By Mathi
Google Oneindia Tamil News

Govt to launch internet spy system 'Netra' soon
டெல்லி: இணையத்தில் சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகளை உளவுத்துறையினர் கண்காணிப்பதற்காக 'நெட்ரா' (Netra) என்ற மென்பொருளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது.

இதன் மூலம் சமூக வலை தளங்கள், மின்னஞ்சல்கள், வலைப்பூக்கள், இணைய உரையாடல்கள் போன்றவற்றில் "தாக்குதல்" (attack))', "குண்டு வெடிப்பு" (bomb blast) "கொலை செய்தல்" (kill) போன்ற சந்தேகத்துக்கு உரிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அவை உடனடியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

டிஆர்டிஓ-வின் ஓர் அங்கமான செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோவியல் ஆய்வகம் (சிஏஐஆர்) இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளது.

இதில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து சமீபத்தில் மத்திய அமைச்சரவை செயலகம், உள்துறை அமைச்சகம், டிஆர்டிஓ, சிஏஐஆர், ஐ.பி. உளவு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறையினர் விவாதித்து பரிந்துரை வழங்கியுள்ளனர்.

நெட்ரா செயல்படத் தொடங்கும்போது, இணையத்தை பயன்படுத்துபவர்களைக் கண்காணிப்பது மிகவும் சுலபமாகிவிடும் என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.

English summary
Beware! Use of words like "attack", "bomb", "blast" or "kill" in tweets, status updates, emails or blogs may bring you under surveillance of security agencies as the government will soon launch "Netra", an internet spy system capable of detecting mala fide messages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X