For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனிமே 1 கி.மீ. = 4 கி.மீ... குழப்பமா இருக்கா!....தலை சுத்தாம படிங்க என்னன்னு புரியும்!

சாலையின் நீளத்தை கண்டறிய புதிய நடைமுறையை மத்திய அரசு பயன்படுத்தவுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நெடுஞ்சாலைகளின் நீளம் பற்றி மத்திய அரசு புது முடிவு- வீடியோ

    டெல்லி: புதிதாக கட்டப்படும் நெடுஞ்சாலைகளின் நீளத்தை கண்டறிய மத்திய அரசு புதிய நடைமுறையை பயன்படுத்தவுள்ளது.

    புதிதாக கட்டப்படும் சாலைகளின் நீளத்தை கணக்கிட தற்போது ஒட்டுமொத்த சாலையின் நீளத்தை கணக்கெடுக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது. இதனால் சாலைகளின் நீளத்தில் சிறிது முரண்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    Govt Shifts to ‘Lane Kilometre’ Concept to Calculate Road Length

    இதனால் புதிய நடைமுறையை பயன்படுத்தி சாலையின் நீளம் அளவெடுக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

    இந்த புதிய திட்டத்தின் படி, சாலையின் நீளம் எப்படி கணக்கெடுக்கப்படும் என்றால், உதாரணத்துக்கு 1 கி.மீ. நீளம் கொண்ட 4 வழி நெடுஞ்சாலை கட்டப்படுகிறது என்றால் அதன் நீளம் 4 கி.மீ. சாலையாக கணக்கிடப்படும். தற்போது பல்வேறு சாலைகள் ஒரு வழி சாலையாக கணக்கிடப்படுகிறது.

    இந்த புதிய திட்டத்தின் மூலம் நாட்டில் கட்டிமுடிக்கப்பட்ட நெடுஞ்சாலைகளின் உண்மையான நீளம் கணக்கெடுக்க உதவும் என்று அரசு அதிகாரிகளும் நிபுணர்களும் நம்புகின்றனர். கடந்த 2017-18-ஆம் ஆண்டு வரை கட்டி முடிக்கப்பட்ட சாலைகளை கணக்கிட்டால் 34,378 கி.மீ தூரம் வரும். ஆனால் பழைய கணக்கெடுப்பு முறையை பயன்படுத்தினால் 9.829 கி.மீ. தூரம் மட்டுமே வரும்.

    நடைபாதையுடன் கூடிய இரு வழிச்சாலையை அமைக்க ஒரு கி.மீ. தூரத்துக்கு ரூ.6 கோடி முதல் ரூ.8 கோடி வரை நிதி செலவாகும். அதே 4 வழி சாலை திட்டத்தில் ஒரு கி.மீ.ருக்கு ரூ. 14 கோடி முதல் 20 கோடி வரை செலவாகும் எனக் கூறப்படுகிறது.

    English summary
    The Central government has now shifted to the lane-kilometre concept instead of traditional linear method.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X