'கொச்சு கொச்சு சந்தோஷங்கள்'... தொழிலதிபர் ரவி பிள்ளை மகள் திருமணத்திற்கு பாகுபலி பேலஸ் செட்!
கேரளா: கேரள மாநிலத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் ரவி பிள்ளையின் மகள் திருமணத்திற்காக கொல்லம் நகரின் மைய பகுதியில் உள்ள 8 ஏக்கர் நிலத்தில் பாகுபாலி அரண்மனையைப் போல பிரமாண்ட செட் உருவாக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவி பிள்ளையின் மகள் டாக்டர். ஆர்த்திக்கும், கொச்சியைச் சேர்ந்த டாக்டர். ஆதித்யா விஷ்ணுவுக்கும் இன்று திருமணம் நடைபெறுகிறது. இதற்காக 'பாகுபலி' அரண்மனையைப் போல 8 ஏக்கரில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை 'பாகுபலி' படத்தின் கலை இயக்குனர் சாபு சிரில்தான் (இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்தான்) நிர்மானித்துள்ளார். இந்த செட்தான் இப்போது கேரளாவின் டாக் ஆப் தி ஸ்டேட் ஆக மாறியுள்ளது.

ராஜஸ்தான் அரண்மனை போல
இது குறித்து சாபு சிரில் கூறுகையில், 5 ஏக்கரில் அமைக்கப்பட்ட 'பாகுபலி' படத்தின் அரண்மனையை உருவாக்க இரண்டரை ஆண்டுகள் ஆனது. ஆனால் இங்கு 8 ஏக்கரில் 3 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பில் ராஜஸ்தான் அரண்மனை வடிவில் இந்த செட் உருவாக்கப்பட்டுள்ளது.

30,000 பேர் உட்காரலாம்
ஒரே நேரத்தில் 30 ஆயிரம் விருந்தினர்கள் அமரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பந்தலையும், அரண்மனையையும் உருவாக்க ரூ.20 கோடி செலவானது. 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து இதனை உருவாக்கியுள்ளனர் என்றார்.

ரூ. 10 கோடி நன்கொடையாம்
தொழில் அதிபர் ரவி பிள்ளையின் மகள் திருமணத்தையொட்டி திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் உள்ள அறக்கட்டளைகளுக்கு ரூ.10 கோடி வரை நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எம்புட்டு பேரு வர்றாங்க பாருங்க
திருமணத்தில் ஐக்கிய அரபு எமிரேட்டின் இந்திய தூதர், பக்ரைன் ராஜ குடும்ப பிரதிநிதி கத்தார் நாட்டின் அரச குடும்பத்தினர், சவுதி அரேபியா நாட்டின் மன்னர் குடும்பத்தினர், லெபனான் நாட்டின் தூதர் உள்ளிட்ட 42 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

சினிமா நட்சத்திரங்களும்
இவர்களை தவிர பாலிவுட், ஹாலிவுட் மற்றும் கேரள திரையுலக நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், மத்திய மந்திரிகள், தொழில் அதிபர்களும் மணமக்களை வாழ்த்த நேரில் வருகிறார்கள்.

செலவு மட்டும் ரூ. 55 கோடியாம்
இவர்களுக்காக தனி விமானங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு உணவு வகைகளும் திருமண விருந்தில் இடம் பெறுகிறது. திருமண செலவு மட்டும் ரூ.55 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.

26க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
வெளிநாடு வாழ் இந்தியரான ரவி பிள்ளை வளைகுடா நாட்டிலும், கிழக்கு ஆசிய நாடுகளிலும் கட்டுமானம், கனிம மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். 26-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவரது நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்கு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். ரவி பிள்ளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை அளித்தபோது அழைப்பிதழுடன் விலை உயர்ந்த பட்டுச்சேலை, பட்டு வேட்டி, அங்க வஸ்திரம் ஆகியவற்றையும் வழங்கியுள்ளார்.

"அச்சன்" மனசுக்கேற்ப வாழ்ந்தா சரி!
இவ்வளவு செலவு செய்து கல்யாணம் செய்கிறார் ரவி பிள்ளை. தந்தைக்கு மகிழ்ச்சி தரும் மகள் வாழ்ந்து காட்டினால் சரித்தான்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications