For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜிஎஸ்டி எதிரொலி.. செல்போன், ஐபேட் விலைகளை அதிரடியாக குறைத்தது 'ஆப்பிள்'!

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது போன், ஐபேட் உள்ளிட்டவற்றின் விலைகளை குறைத்துள்ளது.

ரூ.60000க்கு விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 7 (32ஜிபி), தற்போது ரூ.56,200க்கு கிடைக்கிறது. அதேபோல ரூ.70000 மதிப்புள்ள ஐபோன் 7 (128ஜிபி) செல்போன் தற்போது ரூ.65,200க்கு விற்பனையாகிறது. அதேபோல 256 ஜிபி கொண்ட ரூ.80000க்கு விற்பனையான செல்போன்கள், இப்போது ரூ.74,400க்கு கிடைக்கிறது.

GST impact: Apple cuts iPhone, iPad prices in India

ஐபோன் 7பிளஸ் போன் 72000த்துக்கு விற்பனையானது. தற்போது ரூ.67,300க்கு விற்பனையாகிறது. 32 ஜிபி ஐபோன்6எஸ் முன்பு ரூ.50000க்கு விற்பனையானது. தற்போது ரூ.46900க்கு விற்பனையாகிறது.

பண்டிகை காலம் இந்தியாவில் தொடங்க உள்ள சூழ்நிலையில், ஆப்பிள் இவ்வாறு விலை குறைப்பு செய்துள்ளதால், அதன் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என கூறுகிறார்கள் செல்போன் சந்தை நிபுணர்கள். இவ்வாண்டில் அதிகம்பேர் முதல் முறையாக ஆப்பிள் குடும்பத்திற்குள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது என்று அந்த நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவதி்தார்.

பெங்களூரில் அசெம்பிள் செய்யப்படும், 32 ஜிபி திறன்கொண்ட, ஐபோன் எஸ்இ போன்கள் ரூ.27200 என்ற விலையிலிருந்து ரூ.26000ருக்கு குறைந்ததை இதற்கு உதாரணமாக சொல்கிறார்கள். ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம்குக் சமீபத்தில் மோடியை சந்தித்தபோது, பெங்களூர் தயாரிப்பு பிரிவு குறித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A day after the Goods and Services Tax (GST) came into practice, Apple on Saturday reduced the retail prices of iPhones, iPads, Macs and Apple Watch models for its consumers in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X