For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஸ்வரூபமெடுத்த ஜிஎஸ்டி வரி.. மற்ற நாடுகளில் இவ்வளவுதானுங்க!

உலகின் மற்ற நாடுகளின் ஜி.எஸ்.டி வரி குறித்த புள்ளி விவரங்களை விவரிக்கும் செய்தித் தொகுப்பு இது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியா முழுவதும் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வந்தது. இது இந்தியா முழுமைக்கும் ஒரே அளவில் வரி விதிக்கும் திட்டம் ஆகும். நாடு முழுவதும் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இப்போதும் இருந்து வருகிறது.

ஜி.எஸ்.டி என்பது சரக்கு மற்றும் சேவை வரி ஆகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுவேறு விதமான வரி, நேர்முக மற்றும் மறைமுக வரிகள் என்று இருக்கும் விதியை மாற்றி நாடு முழுமைக்கும் ஒரே விதியை அமல்படுத்துவது தான் இதன் நோக்கம்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே இந்த வரியை கடந்த ஜூலை ஒன்றாம் தேதி அறிமுகப்படுத்தியது பா.ஜ.க அரசு. இருந்தபோதிலும், தற்போது பொருள்களைப் பொறுத்து ஐந்து விதமாக பிரித்து இந்த வரி வசூலிக்கப்படுகிறது. 0%, 5%,12%,18% மற்றும் 28% என்கிற வரி விதிப்பு அமலில் உள்ளது.

இந்தியாவும் ஜி.எஸ்.டி.,யும்

இந்தியாவும் ஜி.எஸ்.டி.,யும்

ஜி.எஸ்.டி புதுமையான விஷயம் அல்ல. ஏற்கனவே உலகில் பல நாடுகளில் இந்த வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. ஆனால், மற்ற நாடுகளை விட வரி விதிப்பு 28%, அதிகமே. இந்தியாவின் போட்டி நாடான சீனாவில் அதிகபட்சமாக 17%, பிரேசிலில் 10% மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

வளரும் நாடுகளின் ஜி.எஸ்.டி

வளரும் நாடுகளின் ஜி.எஸ்.டி

அதே சமயம் வளர்ந்த நாடுகளான பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் ஜி.எஸ்.டி வரி 19% முதல் 20% வரை இருக்கிறது. அதே சமயம் வளரும் நாடுகள் 20 முதல் 22 சதவிகிதம் வரை ஜி.எஸ்.டி விதித்தால் அது வளர்ச்சிக்கு உதவும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நியூஸிலாந்தில் ஜி.எஸ்.டி

நியூஸிலாந்தில் ஜி.எஸ்.டி

நியூசிலாந்தில் 1986ல் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த வரி. அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கும் அங்கு 15% வரி வசூலிக்கப்படுகிறது. உலகில் அதிக வரி வசூலிக்கும் வளரும் நாடு இதுவே. ஆஸ்திரேலியாவில் 2000ம் ஆண்டு முதல் 10% வரி வசூலிக்கப்படுகிறது.

17% ஜிஎஸ்டி

17% ஜிஎஸ்டி

இந்தியாவைப் போலவே அங்கும் பொருட்களைப் பொறுத்து வரி வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 17% வசூலிக்கப்படுகிறது. மாநிலங்களுக்குள் வரி விகிதம் 4 முதல் 25 சதவிகிதமாக இருக்கிறது.

1991-ல் ஜிஎஸ்டி

1991-ல் ஜிஎஸ்டி

கனடாவில் 1991ம் ஆண்டு அங்கு ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டது. மருந்து, வீட்டு வாடகை, மளிகை சாமான்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. மலேசியாவில் 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 25 ஆண்டுகளாக நிறைவேற்றபடாமல் இருந்த இந்தச் சட்டம், 6% வரி விதித்து அமலுக்கு வந்தது.

சிங்கபூரின் வரி தெரியுமா ?

சிங்கபூரின் வரி தெரியுமா ?

மெர்சல் படத்தில் விஜய் பேசும் ஜி.எஸ்.டி.,க்கு எதிரான வசனத்தில் சிங்கப்பூரின் ஜி.எஸ்.டி பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கும். அங்கு 1994ல் 3% வரியோடு ஜி.எஸ்.டி அமலுக்கு வந்தது. அதே சமயம் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு ஜி.எஸ்.டி வரியில் இருந்து வரி விலக்கு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

English summary
GST is not only practiced in India. World's top countries are already using the GST system. Here are some of the coutries that levied GST rates. a small analysis about the Indian GST and other countries
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X