For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓட்டுதான் முதலில்.. தாலி அப்புறமாக கட்டலாம்.. குஜராத் வாக்குப் பதிவு சுவாரசியங்கள்

குஜராத் முதல் கட்ட வாக்குப் பதிவில் நடந்த சில சுவாரசிய பதிவுகள் இவை.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஓட்டுதான் முதலில்.. தாலி அப்புறமாக கட்டலாம்.. குஜராத் வாக்குப் பதிவு சுவாரசியங்கள்- வீடியோ

    காந்திநகர்: குஜராத் முதல் கட்ட வாக்குப் பதிவில் ஏராளமான சுவாரசிய சம்பவங்கள் நடந்துள்ளது. பரூச் வாக்குச் சாவடியில் தாலி கட்டுவதற்கு முன்பாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மணக்கோலத்தில் வந்து மணமக்கள் வாக்களித்தனர்.

    குஜராத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

    பல இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்து இருந்தன. இவற்றை சரி செய்துவிட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    126 வயது மூதாட்டி

    126 வயது மூதாட்டி

    இன்றைய வாக்குப் பதிவில் பல சுவாரசிய சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்ராணா. உப்லேடா என்ற இடத்தில் 126 வயது மூதாட்டி அஜிபா வாக்களித்தார்.

    தாலி கட்டும் முன்பு

    தாலி கட்டும் முன்பு

    பரூச் என்ற வாக்குச் சாவடியில் மணமக்கள் ஜோடியாக வந்து வாக்களித்தனர். தாலி கட்டுவதற்கு முன்னதாக வாக்களித்துவிட வேண்டும் என்பதற்காக உற்றார் உறவினர்களுடன் வாக்குச் சாவடிக்கு வந்திருந்தனர்.

    துரோகி ஒழிக என கோஷம்

    துரோகி ஒழிக என கோஷம்

    ஜூனாகத்தில் ஹர்திக் பட்டேல் அணியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ரேஷ்மா பட்டேல் வாக்களிக்க வந்தார். அவருக்கு எதிராக நம்மூர் பாணியில் துரோகி ஒழிக என பட்டேல் சமூகத்தினர் முழக்கமிட்டனர்.

    தேர்தல் புறக்கணிப்பு

    தேர்தல் புறக்கணிப்பு

    ராஜ்கோட்டில் கிரிக்கெட் வீரர் புஜாரா வாக்களித்தார். ஜாம்நகரின் கல்யாண்பூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை முன்வைத்து தேர்தல் புறக்கணிப்பும் நடந்தது.

    என்.ஆர்.ஐ. இந்தியர்

    என்.ஆர்.ஐ. இந்தியர்

    வெளிநாடு வாழ் இந்தியரான பாவ்னா கோயானி வாக்களிப்பதற்காக குஜராத்துக்கு வருகை தந்தார். அவர் ராஜ்கோட் மேற்கு வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

    English summary
    A bride in Baruch casts vote before heading for her wedding ceremony.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X