குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் மரணம் - பிரதமர் மோடி நிதி உதவி

குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவ

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா நோயாளிகள் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர், நிதி உதவி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இன்று அதிகாலையில் அகமதாபாத்தில் உள்ள ஷ்ரே மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள ஐசியு வார்டில் நிகழ்ந்த தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருமே கொரோனா நோயாளிகள் என்று தெரிய வந்துள்ளது.

Gujarat: Fire accident 8 dead - P M announces releief fund

தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை கட்டுப்படுத்தியதால் உயிரிழப்பு அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வந்த மற்ற நோயாளிகளை உடனடியாக போலீஸார், தீயணைப்பு வீரர்களும் வேறு மருத்துவமனைக்கு மாற்றினர்.

Gujarat: Fire accident 8 dead - P M announces releief fund

தீ விபத்து பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி அகமதாபாத் மருத்துவமனை தீ விபத்து பற்றிய செய்தி வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இது குறித்து குஜராத் முதல்வரிடம் பேசியுள்ளதாகவும் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

Gujarat: Fire accident 8 dead - P M announces releief fund

தீ விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறியுள்ளார். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் அளிக்கவும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் அளிக்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+