குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் தீ விபத்து - 8 பேர் பலி
குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்: குஜராத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவர்.
அகமதாபாத்தில் உள்ள ஷ்ரே மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள ஐசியு வார்டில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. மற்ற நோயாளிகளை உடனடியாக போலீஸார், தீயணைப்பு வீரர்களும் வேறு மருத்துவமனைக்கு மாற்றினர்.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட அகமதாபாத் நகர உதவி ஆணையர் எஸ்பி ஸலா, விபத்து பற்றி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். தீ கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக கூறியுள்ளளார்.













Click it and Unblock the Notifications