33 பேர் பலியான தீ விபத்து: ராஜ்கோட் மாநகராட்சி அதிகாரிகளை இன்றும் சாடிய குஜராத் உயர்நீதிமன்றம்!
அகமதாபாத்: 33 பேரை பலி கொண்ட குஜராத் ராஜ்கோட் பொழுது போக்கு விளையாட்டு மைய தீ விபத்து வழக்கில் ராஜ்கோட் மாநகராட்சி அதிகாரிகளை அம்மாநில உயர்நீதிமன்றம் மிக கடுமையாக விமர்சித்திருக்கிறது. குஜராத் அரசு மீது நம்பிக்கை இல்லை; அதிகாரிகளுக்கு கண்பார்வை இல்லையா? தூங்கிக் கொண்டிருந்தனரா? என சரமாரியாக அம்மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
ராஜ்கோட்டில் டிஆர்பி கேம் என்ற சிறுவர்களுக்கான தனியார் விளையாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சிறுவர், சிறுமியர் இம்மையத்துக்கு வருகை தந்தனர். அப்போது விளையாட்டு மையத்தின் தரைத் தளத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மேலே 4-வது மாடி வரை பரவியது. இந்த விபத்தில் சிறுவர், சிறுமியர் உட்பட மொத்தம் 33 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பைரேன் வைஷ்ணவ், தேவன் எம். தேசாய் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை நீதிபதிகள் மிகக் கடுமையாக விமர்சித்தனர்.
மேலும் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் உரிய அனுமதி பெறாமல் இயங்கி இருக்கின்றன. இதை எல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு கண்கள் இல்லையா? அல்லது மாநில அரசு உறங்கிவிட்டதா? மாநில அரசு மீது நம்பிக்கை வரவில்லை. 24 மாதங்களாக அனுமதியே பெறாமல் ஒரு பொழுது போக்கு விளையாட்டு மையம் செயல்பட்டிருக்கிறது.. இந்த மையத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்றதாக போட்டோக்களை காட்டுகிறீர்களே.. இந்த படத்தில் இருக்கும் அதிகாரிகள் அந்த மையத்துக்கு விளயாடவா போனார்கள்? எதற்காக அங்கே போனார்கள்? ராஜ்கோட் மாநகராட்சி அதிகாரிகள் கண்களை மூடிக் கொண்டா இருந்தனர்? என சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட விசாரணையின் போதும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என காட்டமாக நீதிபதிகள் விமர்சித்திருந்தனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications