வதேராவுக்கு கடும் நெருக்கடி:- இழுத்து மூடிய நிறுவனங்கள், சொத்து விவரத்தை தோண்டுகிறது ஹரியானா அரசு!!
குர்கான்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா வாங்கிக் குவித்த சொத்துகள், இழுத்து மூடிய நிறுவனங்கள் விவரங்களை ஹரியானா அரசு திரட்டி வருகிறது. இதனால் வதேரா மீது விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் பாயக் கூடும் என்று கூறப்படுகிறது.
சோனியாவின் மகள் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேரா, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பல மாநிலங்களில் ஏழைகள் மற்றும் அரசு நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி வாங்கிக் குவித்து 'நிலக் கொள்ளை'யில் ஈடுபட்டார். பின்னர் இந்த நிலங்களை தனியார் நிறுவனமான டி.எல்.எப்.க்கு அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தார் என்பது குற்றச்சாட்டு.

இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த ஹரியானா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி கெம்காவை முன்பு அம்மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு பந்தாடியது. இந்த நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே தமது பல நிறுவனங்களை வதேரா மூடினார்.
இதனைத் தொடர்ந்து அண்மையில் ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது முதல் வேலையான வதேராவின் நிலக்கொள்ளை விவகாரம் கையிலெடுப்போம் என்று அந்த அரசு அறிவிக்க.. எஞ்சிய நிறுவனங்களையும் இழுத்து மூடினார் வதேரா.
ஆனாலும் ஹரியானா அரசு விடுவதாக இல்லை. குர்காம் மாவட்ட மாஜிஸ்திரேட் சேகர் வித்யார்திக்கு அம்மாநில அரசு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், வதேரா வாங்கிக் குவித்த சொத்துகள், இழுத்து மூடிய நிறுவனங்கள் ஆகியவற்றின் விவரங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதனால் வதேரா மீது விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் பாயக் கூடும் எனக் கூறப்படுகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications