‛கோவில் இருந்த இடத்தில் ஞானபாவி மசூதி’.. ASI சொல்லியாச்சு! அயோத்தி போல் டிரஸ்ட் கேட்கும் வக்கீல்
வாரணாசி: இந்து கோவில் இருந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நடவடிக்கையை மத்திய அரசு தொடங்க வேண்டும். அயோத்தி போல் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என இந்துக்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் தெரிவித்துள்ளார். மேலும் ஆய்வறிக்கை குறித்த முக்கிய விஷயத்தையும் அவர் கூறியுள்ளார்
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியின் ஒருபகுதியில் இந்து சிலைகளை வழிபட ஆண்டு முழுவதும் அனுமதி கோரி 5 பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதையடுத்து ஞானபாவி மசூதி விவகாரம் பூதாகரமானது.

இதற்கிடையே நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதற்காக இந்திய தொல்லியல் துறை சார்பில் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த குழுவின் ஆய்வுக்கு முதலில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஆய்வு செய்ய தடைக்கோரி மசூதி நிர்வாகம் சார்பில் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனாலும் நீதிமன்றம் இந்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கையை வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தது. அதில் இடம்பெற்றிருந்த தகவல்களை நீதிமன்றம் கசியவிடாமல் பாதுகாத்தது. இதற்கிடையே தான் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணைக்காக அறிக்கை இந்து மற்றும் மசூதி நிர்வாகம் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.
இந்த அறிக்கையில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ள இடத்தில் இதற்கு முன்பு பெரிய இந்து கோவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அறிவியல் முறையிலான ஆய்வில் பழங்கால கட்டடத்தில் எச்சங்கள், கலை, சிற்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தூண்கள், சுவர்களில் இந்து மதம்சார்ந்த சிற்பங்கள், பறவைகளின் சிற்பங்கள் உள்ளன. மசூதி கட்டும்போது அந்த தூண்கள், சுவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்போது அதில் இருந்த சிற்பங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதி வழக்கில் இந்த அறிக்கை என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
#WATCH | On Archaeological Survey of India's report on the Gyanvapi Case, Advocate Hari Shankar Jain says, "The report clearly states that a temple existed at the site ( of Gyanvapi mosque). The Government of India should take further steps in this matter, declare it as a… pic.twitter.com/VOJpBl3cP8
— ANI (@ANI) January 26, 2024
இந்நிலையில் தான் அயோத்தி போல் அடுத்தக்கட்ட நடவடிக்கை மத்திய அரசு எடுக்க வேண்டும் என இந்துக்கள் சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஞானவாபி மசூதி இருந்த இடத்தில் இதற்கு முன்பு கோவில் இருந்துள்ளதாக இந்திய தொல்லிய துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த இடத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி சிறப்பு சட்டம் இயற்றி இந்த இடம் முழுவதையும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அயோத்தியில் (அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை) உள்ளதை போல் அறக்கட்டளை இயக்கம் உருவாக்கப்பட வேண்டும். இதன்மூலம் இந்துக்கள் வழிபாட்டை தொடங்க முடியும்'' என்றார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications