For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்படியும் பஞ்சாயத்தா? பாதி அச்சடிக்கப்பட்ட புதிய ரூ500, ரூ2,000 நோட்டுகள்!!

ஏடிஎம் மையங்களில் பாதி அச்சடிக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளும் வருகின்றன.

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: பெரும்பாடுபட்டு வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் இருந்து பெறப்படும் புதிய ரூபாய் நோட்டுகளில் சில பாதி அச்சடிக்கப்படாமல் கிடைப்பது வாடிக்கையாளர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் நாகலாந்தின் திமாப்பூரில் சில ஏடிஎம் மையங்களில் கிடைத்த புதிய ரூபாய் நோட்டுகள்தான் பீதியை கிளப்பிவிட்டன.

Half printed New Currnecy notes from ATMs

மும்பையில் ஒரு ஏடிஎம் மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில் பாதி அச்சடிக்கப்படாத நிலையில் சில நோட்டுகள் வந்தன.

அதேபோல் திமாப்பூரில் 2,000 ரூபாய் நோட்டின் ஒரு பகுதியில் ரூ2000 என்பது விடுபட்டும் போயும் இருந்தது. ஏற்கனவே படாதபாடு பட்டு பெற்ற ரூபாய் நோட்டுகளை மாற்ற மீண்டும் அலையத்தான் வேண்டுமோ என புலம்புகின்றனர் பொதுமக்கள்.

English summary
In Mumbai and Dimapur customers got half printed the new Rs500, Rs2000 currency notes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X