For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேவையின்றி "சீண்டி" சிக்கிய மம்தா பானர்ஜி.. மொத்தமாக கைமாறிய "பவர்".. வங்கத்தில் செம டிவிஸ்ட்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சாட்டையை சுழற்ற தொடங்கி உள்ளது. மம்தா பானர்ஜியின் முடிவுகளை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளது.

தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் தேர்தல் களம் சூடாக உள்ளது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மீண்டும் மம்தா பானர்ஜிதான் முதல்வராக வருவார் என்றெல்லாம் கருத்துக்கணிப்புகள் சொன்னாலும் பாஜக பெரிய நம்பிக்கையில் இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய அளவில் அக்கவுண்ட்டை தொடங்கலாம் என்ற திட்டத்தில் பாஜக இருக்கிறது. களநிலவரமும் பாஜகவிற்கு ஆதரவாக இருப்பதாக கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 உத்தரவு

உத்தரவு

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் முடிவுகளை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளது. இங்கு சட்ட விதி 324ஐ தேர்தலை ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மமதா பானர்ஜியின் கைகள் கட்டப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். இந்த விதியை பயன்படுத்தி ஒரு மாநில முதல்வரின் சில உத்தரவுகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க முடியும்.

தடை

தடை

முக்கியமாக 324 விதிப்படி அரசு அலுவலகம், அரசு நிர்வாகம், தலைமை செயலகம், முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் போன்ற இடங்களில் அரசு புதிய நியமனங்களை செய்ய முடியாது. ஏற்கனவே இருக்கும் உறுப்பினர்களுக்கு பதவி நீட்டிப்பு, ரிட்டையர் ஆக போகும் நபர்களுக்கு பதவி நீட்டிப்பு போன்ற உத்தரவுகளை போட முடியாது. இது அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

நிறுத்தி வைப்பு

நிறுத்தி வைப்பு

இந்த விதி காரணமாக மேற்கு வங்கத்தில் எந்த முனிசிபாலிட்டியிலும் தேர்தல் முடியும் வரை மம்தா பானர்ஜி எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. பாஜக கொடுத்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த 324 விதியை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. மேற்கு வங்கத்தில் சில இடங்களில் பாஜக கொடி, பேனர்களை வைக்க முனிசிபாலிட்டி அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.

அமித் ஷா ஊர்வலம்

அமித் ஷா ஊர்வலம்

அமித் ஷாவின் சில ஊர்வலத்திற்கும் கூட பேனர் அனுமதி மறுக்கப்பட்டது. மம்தா போட்ட உத்தரவு காரணமாக இப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு எதிராக பாஜகவினர் புகார் கொடுத்தனர்.

எதிராக சென்றது

எதிராக சென்றது

இதுதான் தற்போது மம்தாவிற்கு எதிராக திரும்பி உள்ளது. சில நியமனங்களில் மம்தாவின் முடிவெடுக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணையம் பறித்துள்ளது. இதனால் தேர்தல் வரை கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

அதிசயம்

அதிசயம்

பொதுவாக இந்த சட்ட விதியை தேர்தல் ஆணையம் அவ்வளவு எளிதாக அமல்படுத்தாது.ஆனால் இந்த முறை மேற்கு வங்கத்தில் இந்த விதி அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் இப்படி செய்துள்ளது. மம்தாவிற்கு எதிராக பாஜக இன்னும் பல புகார்களை இதே போல வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Hands tied for Mamata Banerjee: Election Commission invokes articles 324 in West Bengal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X