விஹெச்பி தலைவர் தொகாடியாவுடன் ஹர்திக் பட்டேல், காங். தலைவர் மோத்வாடியா சந்திப்பு

என்கவுண்ட்டர் பீதிக்குள்ளாக்கியிருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியாவை பட்டேல்கள் தலைவர் ஹர்திக் பட்டேல், குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா ஆகியோர் இன்று சந்தித்தனர்.

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத், ராஜஸ்தான் போலீசாரால் என்கவுண்ட்டர் பீதிக்குள்ளாக்கியிருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியாவை பட்டேல்கள் தலைவர் ஹர்திக் பட்டேல், குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா ஆகியோர் இன்று சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்கவுண்ட்டர் அச்சத்தால் திடீரென மாயமானார் தொகாடியா. பின்னர் சுயநினைவில்லாத நிலையில் மருத்துவமனையில் தொகாடியா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Hardik Patel, Congress leader Modhwadia meet Pravin Togadia in Ahmedabad hospital

இந்துக்களுக்கான தமது குரலை ஒடுக்க சதி நடக்கிறது; சதிகாரர்களை விரைவில் அம்பலப்படுத்துவேன் என தொகாடியா கூறியுள்ளார். இந்நிலையில் பட்டேல்கள் சமூகத் தலைவரான ஹர்திக் பட்டேல், குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா ஆகியோர் இன்று தொகாடியாவை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தொகாடியாவுக்கு ஆதரவாக ஹர்திக் பட்டேல், அர்ஜூன் மோத்வாடியா குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+