2014ல் கூட "மோடி அலை" எடுபடாத தொகுதி.. உபி அசம்கரில் இம்முறையும் கடும் போட்டி! ரேஸில் முந்துவது யார்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளில் ஒன்று தான் அசம்கர். அங்கே கள நிலவரம் என்ன.. அங்கு யார் வெல்ல வாய்ப்பு இருக்கிறது.. என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அங்கே முக்கிய தொகுதிகளில் ஒன்று தான் அசம்கர். கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த தொகுதி 1952ஆம் ஆண்டு முதேல இருந்து வருகிறது.

உத்தரப்பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்த தொகுதி எப்போதும் அரசியல் கட்சிகளுக்குப் போர்க்களமாகவே இருந்து வந்துள்ளது. இது காலம்காலமாக யாதவர்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியாகவே இருந்துள்ளது.
வரலாறு என்ன: 1952இல் காங்கிரஸ் கட்சியின் அல்கு ராய் சாஸ்திரி என்பவர் இந்த தொகுதியிலிருந்து முதல்முறையாக எம்பியாக தேர்வானார். அதன் பிறகு 1984 தேர்தல் வரை காங்கிரஸ் ஆதிக்கம் இருந்தது. அதன் பிறகு மற்ற கட்சிகள் வளர்ந்துவிட்ட நிலையில், காங்கிரஸால் அங்கே மீண்டும் வெல்ல முடியவில்லை. 1989க்கு பிறகு அங்கே சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், 2009க்கு பிறகு பாஜகவும் அங்கே வளர்ந்துவிட்டது.
மக்கள் தொகை: இந்த அசம்கர் தொகுதியில் 86 சதவீத கிராமப்புற வாக்காளர்களையும் 14 சதவீத நகர்ப்புற வாக்காளர்களையும் கொண்டு இருக்கிறது. இந்த தொகுதியில் கிராமங்களே அதிகம். சாதி வாரியாகப் பார்க்கும் போது இங்கே பட்டியல் சாதியினர் 25.1% இருக்கிறார்கள். மத ரீதியாகப் பார்க்கும் போதும் முஸ்லீம்கள் கணிசமாக இருக்கும் தொகுதிகளில் இதுவும் ஒன்று. அங்கே 15% முஸ்லீம் வாக்காளர்கள் உள்ளனர்.
ஆதிக்கம் யார்: இந்த தொகுதி யாதவர்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியாகும். இங்கே இதுவரை தேர்வான 19 எம்பிக்களில் 14 பேர் இந்த யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். இந்த தொகுதியில் எம்பியாக தேர்வானவர்களில் ரமாகாந்த் யாதவ் கவனிக்கத்தக்கவர். 1999இல் சமாஜ்வாதி கட்சியில் இருந்து எம்பியாக தேர்வான அவர், 2004இல் பகுஜுன் சமாஜ் சார்பில் போட்டியிட்டு வென்றார். 2009இல் இவரே பாஜக சார்பிலும் போட்டியிட்டு வென்றார். இப்படி இவர் ஒருவரே மூன்று கட்சி சார்பில் இதே தொகுதியில் வென்றுள்ளார்.
மோடி அலை எடுபடவில்லை: கடந்த 2014இல் நாடு முழுக்க மோடி அலை வீசிய போது இந்த தொகுதியில் முலாயம் சிங் போட்டியிட்டார். மோடி அலையைத் தாண்டி அவர் ரமாகாந்த் யாதவை சுமார் 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2019 தேர்தலில் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் இந்தத் தொகுதியில் களமிறங்கினார். அவருக்கு அபாரமான ஆதரவு கிடைக்கவே அவர் பாஜக வேட்பாளர் தினேஷ் லால் யாதவை 2.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கடந்த 2022இல் உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் எம்எல்ஏவாக தேர்வான நிலையில், தனது லோக்சபா தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கே நடந்த இடைத்தேர்தலில் அகிலேஷின் உறவினரான தர்மேந்திர யாதவ் சமாஜ்வாதி தரப்பில் போட்டியிட்டார். பாஜக சார்பில் போஜ்புரி சூப்பர் ஸ்டார் தினேஷ் லால் யாதவ் களமிறங்கினார். இருவருக்கும் 3 லட்சத்திற்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்ற நிலையில், வெறும் 8600 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக இங்கே வென்றது.
அதே வேட்பாளர்கள்: இந்த முறை பாஜக மற்றும் சமாஜ்வாதி 2022இல் போட்டியிட்ட அதே வேட்பாளர்களைக் களமிறங்கி உள்ளது. இது 2022ல் நடந்த தர்மேந்திர யாதவ் vs தினேஷ் லால் யாதவ் தேர்தலில் ரிமேட்ச் போல இருக்கிறது.
பாஜக: லோக்சபா தேர்தல் அறிவிப்பு வரும் முன்பே கடந்த மாத தொடக்கத்தில் இந்த அசம்கர் தொகுதியில் பிரதமர் மோடி பாஜக பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். இது பாஜக எந்தளவுக்கு இந்த தொகுதிக்கு முக்கியத்துவம் தருகிறது என்பதைக் காட்டுகிறது. பூர்வாஞ்சல் பிரச்சாரத்தின் மையத்தில் இருப்பதால் இந்த தொகுதியைத் தக்க வைக்கவே பாஜக விரும்புகிறது. பிரதமர் மோடி மட்டுமின்றி உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மபி முதல்வர் மோகன் யாதவ் ஆகியோரும் இங்கே பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்தியா கூட்டணி: மறுபுறம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் சமாஜ்வாதி போட்டியிடுகிறது. என்ன தான் இந்தியா கூட்டணி என்று சொன்னாலும் அதில் உள்ள சமாஜ்வாதி கட்சிக்கு மட்டுமே இங்கே செல்வாக்கு. பகுஜுன் சமாஜ் கூட்டணிக்குள் வந்திருந்தால் அது சமாஜ்வாதிக்கு இங்கே எளிதாக அமைந்து இருக்கும். ஆனால், அப்படி வராததால் சமாஜ்வதிக்கு இங்கு கடும் போட்டி இருக்கும்.
காங்கிரஸ் கொடியை 'வயநாடு' கோட்டையில் மீண்டும் பறக்கவிடுவாரா ராகுல் காந்தி? வெல்லப் போவது யார்?
.
தனது தலைவர்கள் போட்டியிட்ட தொகுதி என்பதால் இந்த தொகுதியில் வெல்லச் செல்வாக்கு மிக்க தலைகளை சமாஜ்வாதி இறக்கி உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 5 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், ஐந்தும் சமாஜ்வதி வசம் தான் உள்ளது. அது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தருகிறது. இருப்பினும், லோக்சபா தேர்தலில் மோடி பேக்டர் உள்ளே வந்துவிடும்.
யாருக்கு வாய்ப்பு: இதன் காரணமாக அப்பகுதியில் இரு தரப்பிற்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது. கடும் போட்டி இருந்தாலும் மோடி பேக்டர், இந்துக்கள் மக்கள் தொகை ஆகியவை காரணமாக இங்கே பாஜகவுக்குச் சற்று முன்னிலை இருப்பதாகக் கூறப்படுகிறது
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications