காங்கிரஸ் கொடியை 'வயநாடு' கோட்டையில் மீண்டும் பறக்கவிடுவாரா ராகுல் காந்தி? வெல்லப் போவது யார்?
வயநாடு: இந்தியாவில் அதி முக்கியத்துவம் பெற்ற ஒரு தொகுதியாக திகழ்வது கேரளாவின் வயநாடு தொகுதி. இத்தொகுதியில் காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா, பாஜகவின் மூத்த தலைவர் சுரேந்திரன் ஆகியோர் களம் காண்பதால் தேசிய அளவிலான ஐந்து நட்சத்திரத் தொகுதி அந்தஸ்தைப் பெற்றுள்ளது கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி.
லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியே காணாத தொகுதிகள் உண்டு. அப்படி ஒரு தொகுதிதான் வயநாடு. 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முதன் முதலில் வயநாடு தொகுதி சந்தித்தது. இதுவரையிலான 3 தேர்தல்களிலும் காங்கிரஸ்தான் வாகை சூடி இருக்கிறது.

2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது வடக்கு கேரளாவில் உருவாக்கப்பட்டதுதான் வயநாடு லோக்சபா தொகுதி. இது மலைப்பகுதியாகும். வயநாடு லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, கல்பெட்டா, திருவம்பாடி, ஈரநாடு, நீலம்பூர், வண்டூர். அதாவது வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய 3 மாவட்டங்களின் சட்டசபைத் தொகுதிகளைக் கொண்டதாக வயநாடு உருவாக்கப்பட்டது.
2009-ம் ஆண்டு முதல் வயநாடு லோக்சபா தொகுதி தேர்தல்களை எதிர்கொண்டு வருகிறது. 2009, 2014 மற்றும் 2019 ஆகிய 3 லோக்சபா தொகுதிகளிலுமே காங்கிரஸ் கட்சிதான் வயநாடு தொகுதியை கைப்பற்றியது. வயநாடு லோக்சபா தொகுதியில் காங்கிரஸ், சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லீம் மற்றும் இடதுசாரிகள் சமமான பலம் கொண்ட கட்சிகளாக இருக்கின்றன.
வயநாடு லோக்சபா தொகுதியில் 40% இந்துக்கள், 40% முஸ்லிம்கள், 20% கிறிஸ்தவர்கள் உள்ளனர். நகர்ப்புறங்களில் 7% வாக்காளர்களும் கிராமங்களில் 93% வாக்காளர்களும் உள்ளனர். இத்தொகுதியில் தலித்துகள் 7%, பழங்குடிகள் 9.3% உள்ளனர்.
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஷானவாஸ் 410,703 (49.86%) வாக்குகளைப் பெற்று வயநாடு தொகுதியின் முதல் எம்பியானார். அத்தேர்தலில் சிபிஐ ரஹ்மத்துல்லா 2,57,264 (31.23%); என்சிபி கே.முரளீதரன் 99,663 (12.10%), பாஜக சி.வாசுதேவன் மாஸ்டர் 31,687 (3.85%) வாக்க்களைப் பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஷானவாஸ் 1,53,439 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றார்.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளரான ஷானவாஸ் மீண்டும் அமோக வெற்றியைப் பெற்றார். 2014-ல் ஷானவாஸ் 377,035 (41.21%); சிபிஐ சத்யன் மொகேரி 3,56,165 (38.92%), பாஜகவின் பிஆர் ரஸ்மில்நாத் 80,752 (8.83%) வாக்குகளைப் பெற்றனர். 2014 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஷானவாஸ், வெறும் 20,870 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றார்.
ஆனால் 2019 லோக்சபா தேர்தலில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் தொகுதியானது வயநாடு. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். அத்தேர்தலில் ராகுல் காந்தி தமது அமேதி (உபி) தொகுதியில் தோல்வியைத் தழுவினாலும் அமேதியில் அதிரிபுதிரி வெற்றியை அறுவடை செய்தார்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி பெற்ற வாக்குகள் 706,367 (64.94%). அவரை எதிர்த்து களம் கண்ட சிபிஐ கட்சியின் சுனீர் 274,597 (25.24%), பாஜகவின் கூட்டணி கட்சியான பிடிஜேஎஸ் துஷார் வெள்ளப்பள்ளி 78,816(7.25%), எஸ்டிபிஐ பாபு மணி 5,426 வாக்குகளைப் பெற்றனர். சிபிஐ வேட்பாளர் சுனீரை விட ராகுல் காந்தி 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சரித்திர சாதனை படைத்தார்.
2024-ம் ஆண்டு தற்போதைய லோக்சபா தேர்தலிலும் வயநாடு தொகுதி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தேர்தலில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சிபிஐ கட்சியின் மூத்த பெண் தலைவர், தமிழ்நாட்டின் மருமகள் ஆனி ராஜா போட்டியிடுகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- சிபிஐ-ன் தேசிய செயலாளர் டி.ராஜாவின் மனைவி. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுரேந்திரன் இம்முறை வயநாடு தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் வயநாடு லோக்சபா தொகுதி பெரும் எதிர்பார்ப்புக்குரியதான அகில இந்தியாவே உற்று நோக்கும் தொகுதியாக பார்க்கப்பட்டு வருகிறது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications