பிரட் கொடுத்து பாலியல் தொந்தரவு! கொரோனா ஹீரோ ஜீரோவான கதை! தலைப்புச் செய்தியான நபரின் கிரைம் பக்கம்!
போபால் : கொரோனா இரண்டாவது அலையின் போது நோயாளிகளுக்கு உதவியதற்காக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்ற மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்த நிலையில், ஆன்புலன்ஸ் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கைகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
அந்த நேரத்தில் தன்னார்வலர்களின் பங்களிப்பு மிக மிக பெரியது. கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வது, ஆதரவற்ற மக்களுக்கு உணவளிப்பது, ரத்த தானம் என தன்னார்வலர்கள் இரவு பகல் பாராமல் சமூக கடமை ஆற்றினர்.

மபியில் அதிர்ச்சி
அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலையின் போது மக்களால் ஹீரோவாக கொண்டாடப்பட்டு தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த இளைஞர் ஒருவர், தற்போது மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருக்கிறார். ஆனால் தற்போது சிக்கியிருப்பது பாலியல் தொந்தரவு புகாரில் என்பது தான் அதிர்ச்சி தரும் தகவல். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜாவேத் கான் என்பவர் தான் தற்போது மீண்டும் ஊடகங்களின் செய்திகளில் இடம் பிடித்திருப்பவர்.

கொரோனா ஹீரோ
மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஜாவேத் கான், கொரோனா இரண்டாவது அலையின் போது தனக்குச் சொந்தமான ஆட்டோவை ஆம்புலன்சாக மாற்றி நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றார். இதற்காக தனது மனைவியின் நகைகளை விற்றதாக ஜாவேத் கூறினார். ஜாவத் 50க்கும் மேற்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் எனவும், ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் மருத்துவமனைகளுக்கு செல்ல மக்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை நான் சமூக ஊடகங்களிலும், செய்தி சேனல்களிலும் பார்த்தேன் எனவும் வட இந்திய ஊடகங்கள் புகழ் பாடின.

ஆம்புலன்ஸ் சேவை
போபாலின் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு உடனடியாக விரைந்து சென்றதன் மூலம் அவர் குறைந்தது 15 உயிர்களைக் காப்பாற்றியதாகவும் கூறப்பட்டது. இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகளின் தந்தையான ஜாவேத் கான், கொரோனா மற்றும் பிற நோயாளிகளுக்கு இலவச ஆட்டோ-ரிக்ஷா ஆம்புலன்ஸ் சேவை வழங்குவதற்காக தனது மனைவியின் தங்க நெக்லஸை விற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மாலை 27 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தை அணுகி ஜாவேத் கான் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடந்துள்ளார்.

பாலியல் புகார்
இது குறித்து காவல் நிலையப் பொறுப்பாளர் மனிஷ்ராஜ் படோரியா செய்தியாளர்களிடம் பேசிய போது," அந்தப் பெண் தனது புகாரில் ஜாவேத்தின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு சகோதரியாகவே மதித்து வந்த நிலையில், கடந்த மார்ச் 3ஆம் தேதி பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், ஜாவேத் அவரது அறைக்குள் சென்று பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த புகாரைத் தொடர்ந்து, ஐபிசி பிரிவு 376 (2-N) மற்றும் 506 இன் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஜாவேத்தை கைது செய்ய தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications