இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏன் உயர்கிறது தெரியுமா? மத்திய அமைச்சர் சொன்ன காரணத்தை பாருங்க
கவுகாத்தி: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாட்டில் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி அதற்கு ஒரு புது விளக்கம் கொடுத்துள்ளார்.
மத்திய அரசு இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கி வருவதுதான் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்றும், ஒரு லிட்டர் பெட்ரோலை விட ஒரு லிட்டர் இமயமலை தண்ணீர் விலை அதிகம் என்றும் ராமேஸ்வர் தெலி கூறியுள்ளார்.
அஸ்ஸாமின் திப்ருகர் மக்களவை தொகுதி உறுப்பினர் ராமேஸ்வர் தெலி. மத்திய இணை அமைச்சராகவும் உள்ளார்.

தடுப்பூசிக்கு பணம்
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில், நடைபெற்ற கூட்டத்தில் வைத்து, இவ்வாறு அவர் பேசியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பெட்ரோல், டீசலுக்கு போடும் வரியை குறைக்க முடியாது. கோவிட் -19 தடுப்பூசிகளுக்கான பணம் எங்கிருந்து வரும்? நீங்கள் தடுப்பூசிகளுக்கு பணம் செலுத்தவில்லை. தடுப்பூசிகளுக்காகும் செலவை இந்த வரிகளிலிருந்துதான் ஈடுகட்டி வருகிறோம்.

இலவச தடுப்பூசி
நாட்டிலுள்ள 130 கோடி மக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது எங்கள் இலக்கு. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு தடுப்பூசிக்கும் விலை ரூ.1200 என்ற அளவில் உள்ளது. எனவே இதற்கு ஆகும் செலவீனங்களை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது.

மாநில அரசு வரி
ஒரு லிட்டர் பெட்ரோல் அடிப்படை விலை ரூ.40. மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிதான் மிச்சத் தொகையாக உள்ளது. அசாமை பொறுத்தளவில் நாட்டிலேயே மிக குறைவான வாட் வரியை விதிப்பது இந்த மாநிலம்தான். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 28 ரூபாய் மாநில அரசு வரியாக விதிக்கப்படுகிறது. மத்திய அரசு வரி 30 ஆகும்.

காங்கிரஸ் அரசுகள் அதிக வரி
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு, நாட்டிலேயே அதிக அளவுக்கு பெட்ரோல் மீது வாட் வரி விதிக்கிறது. ஆனால் மோடி அரசுக்கு கெட்ட பெயர் வருகிறது. மகாராஷ்டிரா மாநில அரசும் அதிக வாட் வரியை விதிக்கிறது. ஆனால் கெட்ட பெயர் மத்திய அரசுக்கு வருகிறது.

இலவச சிலிண்டர்
மத்திய அரசு உஜ்வாலா-2 திட்டத்தை தொடங்க உள்ளது. 1 கோடி பெண்களுக்கு இலவச எல்பிஜி இணைப்பை வழங்க உள்ளோம். கோவிட் -19 நிலைமையை சமாளிக்க எனது அமைச்சகத்தின் நிதி சுகாதார அமைச்சகத்திற்கு திருப்பி விடப்பட்டது. இப்படித்தான் கொரோனாவுக்கு எதிராக இந்தியா போரிட்டு வருகிறது. இவ்வாறு ராமேஸ்வர் தெலி கூறினார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications