உதயநிதி பிரச்சனையே இன்னும் முடியலை.. இந்து மதம் குறித்து சமாஜ்வாதி தலைவர் சர்ச்சை! கண்சிவந்த அகிலேஷ்
லக்னோ: சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை பாஜக பூதாகரமாக்கியது. இந்த பிரச்சனையையே இன்னும் முடியாத நிலையில் ‛இந்தியா’ கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் சுவாமி பிரசாத் மவுரியா இந்து மதம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார். பாஜகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அவரை கடுமையாக கண்டித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் ‛இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் தொடர்பாக தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தான் முதல்வர் ஸ்டாலின் மகனும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது கொரோனா, மலேரியா, டெங்கு உள்ளிட்டவற்றை ஒழிக்க வேண்டும். அதேபோல் தான் சனாதனமும் என கூறினார்.
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள் ‛இந்தியா’ கூட்டணி சனாதன தர்மத்தை ஒழிக்க நினைக்கிறது என பேசினர். உதயநிதியின் கருத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் விலகி நிற்கின்றனர். இருப்பினும் உதயநிதியின் சனாதனம் தொடர்பான பேச்சு 5 மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இத்தகைய சூழலில் தான் தற்போது இந்து மதம் குறித்து ‛இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் உத்தர பிரதேச எதிர்க்கட்சி தலைவரான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் பேசியுள்ளார். அதாவது சமாஜ்வாதி கட்சியின் சுவாமி பிரசாத் மவுரியா என்பவர் ஜந்தர் மந்தரில் பகுஜன் சமாஜ் உரிமைகள் தொடர்பான மாநாட்டில் பேசியபோது கூறியதாவது:
இந்து மதம் என்பது ஒரு ஏமாற்றுவேலை. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்து என்பது மதம் அல்ல. வாழும் முறை தான் என 2 முறை கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் இந்து என்பது மதம் இல்லை என கூறியுள்ளார். இவர்கள் இதுபோல் பேசுவது சர்ச்சையாகாது. யாருடைய மனதும் புண்படாது. ஆனால் சுவாமி பிரசாத் மவுரியா இதுபற்றி பேசினால் அமைதி சீர்குலைந்துவிடும். மக்களின் மனது புண்பட்டு விடும்’’ என கூறினார்.
இந்நிலையில் தான் சுவாமி பிரசாத் மவுரியாவின் பேச்சு என்பது விவாதத்தை கிளப்பி உள்ளது. பாஜகவினர் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் சமாஜ்வாதியின் தலைவரான அகிலேஷ் யாதவ் சுவாமி பிரசாத் மவுரியாவின் பேச்சை கண்டித்துள்ளார். அதாவது சமாஜ்வாதி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் லக்னோவில் நடந்த நிலையில் அகிலேஷ் யாதவிடம், சுவாமி பிரசாத் மவுரியாவின் பேச்சு குறித்து புகாரளித்துள்ளனர். இதனால் அகிலேஷ் யாதவ் கோபமடைந்துள்ளார். இதையடுத்து அவர், ‛‛பொதுவெளியில் மதம், சாதி குறித்து கருத்துகளை பேச வேண்டாம். இது தொடர்பான கருத்துகளை தலைவர்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும்'' என கோபத்துடன் கூறியுள்ளார்.
‛விடாத பந்தம்’ .. அயோத்தி ராமர் கோவிலுக்கு சீதையின் வீட்டில் இருந்து வரும் சீதனம்! லிஸ்ட் பாருங்க
இப்படி சர்ச்சையாக பேசிய சமாஜ்வாதியின் கட்சியின் சுவாமி பிரசாத் மவுரியா உத்தர பிரதேச மாநிலத்தில் ஓபிசி பிரிவின் முக்கிய தலைவராக அறியப்படுகிறார். இவர் பாஜகவில் செயல்பட்டு வந்தார். உத்தர பிரதேச மாநில முந்தைய பாஜக ஆட்சியில் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்தார். கடந்த ஆண்டு 2022 சட்டசபை தேர்தலின்போது அவர் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அதோடு இவர் அடிக்கடி இந்து மதம் குறித்து பேசி சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ள நிலையில் இந்த முறையும் அவர் சிக்கலை ஏற்படுத்தி உள்ளார்.
நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்யனும்! மீறினால் 11 வெடிகுண்டுகள் வெடிக்கும்! ஆர்பிஐக்கு வந்த மிரட்டல்
அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சை பெரிய அளவில் பாஜகவினர் வடமாநிலங்களில் பரப்பினர். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சுவாமி பிரசாத் மவுரியாவின் பேச்சையும் பாஜகவினர் கையில் எடுக்கலாம். அதோடு இது உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதிக்கும், இந்தியா முழுவதும் ‛இந்தியா’ கூட்டணிக்கும் எதிரானதாக மாறலாம் என்பதால் தான் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கோபமடைந்து சாதி, மதம் குறித்து பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என அட்வைஸ் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications