For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமரின் வீட்டு வசதி திட்டம்.. மோடி அரசில் செயல்பாடு எப்படி?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மோடி தலைமையிலான அரசு மூன்றாண்டு காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் அரசு எந்த அளவு வெற்றி பெற்றுள்ளது என்பது குறித்து, ரன்னிடி கன்சல்டிங் அண்ட் ரிசர்ச்சின் நிதின் மேத்தா மற்றும் ஆய்வாளர் பிரணவ் குப்தா ஆகியோர் நடத்திய புள்ளி விவர ஆய்வு இது.

மோடி அரசாங்கம் அனைவருக்கும் வீடுகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள். ராஜீவ் அவாஸ்யோஜனா, இந்திரா அஸ்ஸோஜனா போன்ற அரசாங்கத்தின் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் மூலம் அனைவருக்கும் வீடு வழங்குவது இலக்கு.

Housing for all in Modi government?

இது தவிர, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் (RERA) செயல்படுவதால் நகர்ப்புற வீட்டு வாங்குபவர்களுக்கும் அது உதவும். ரியல் எஸ்டேட் துறையில் நுகர்வோர் பாதுகாப்பை உணரச் செய்கிறது இந்த சட்டம்.

1985 ஆம் ஆண்டில் இந்திரா அஸ்ஸோஜோனா திட்டம் வீடுகளை நிர்மானித்தல் / புனரமைப்பு செய்வதற்கு கிராமப்புற குடும்பங்களுக்கு உதவி வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

2016-17ம் ஆண்டு இலக்குப்படி பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 2019 ஆம் ஆண்டுக்குள், குட்சா வீடுகளில் வசிக்கும் 1 கோடி குடும்பங்களுக்கு ஒரு புக்கா வீடு வழங்க அரசாங்கம் இலக்கு நிர்ணயிக்கிறது. குறைந்தபட்ச வீட்டின் அளவு 20 சதுர மீட்டரில் இருந்து 25 சதுர மீட்டர் வரை அதிகரித்துள்ளது. மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட மானியம் ரூ. 70,000 முதல் ரூ. 1,20,000 வழங்கப்படும்.

கடந்த சில ஆண்டுகளில் கிராமப்புற வீடு நிர்மானத்தில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், 28 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிந்தன. 2014 ஆம் ஆண்டு முதல் ஒரு நிலையான அதிகரிப்பு இருந்த போதினும், பிரதமரின் வீட்டு வசதி திட்டம் வந்த பிறகு கட்டுமானத்தில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டது.

Swachh Bharat மற்றும் Skill India போன்ற சில திட்டங்களைப் போலவே, அறிவிக்கப்பட்ட வீட்டு வசதி இலக்குகளை அடைவதற்கு அரசாங்கம் அதன் செயல்திறனை மேம்படுத்த வேண்டும்.

2019 ம் ஆண்டுக்குள் 1 கோடி கிராமப்புற வீடுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், ஆண்டுதோறும் நிர்மானிக்கப்பட்டும் வீடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். 9 லட்சம் மற்றும் 12 லட்சம் வரை கடன் பெறும் வகையில் முறையே 4 சதவீதமும், 3 சதவீதமும் வட்டியுடன் கடன் கிடைப்பதை, மாநில அரசு இப்போது உறுதிப்படுத்துகிறது.

திட்டத்தின் விரிவாக்கத்திற்கு முன்பு, பயனாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. எனவே இனிமேல் திட்டம் தோல்விக்கு வழிவகுக்காது என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

நகர்ப்புற வீட்டு உரிமையாளர்களிடையே ஒரு முக்கிய கவலை நிலவுகின்றது. அடுக்கு மாடி குடியிருப்புகள் பெரும் தாமதத்தை ஏற்படுத்துகின்றன. பில்டர்களிடம் கிட்டத்தட்ட முழுமையான பணம் செலுத்திய போதிலும், பல வீட்டுவசதி திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்படவில்லை.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பிரதமரின் வீட்டு வசதி திட்டம் என்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மிகவும் உதவியாக இருக்கும். RERA முறையான நடைமுறை, ரியல் எஸ்டேட் துறையில் ஒரு முன்மாதிரி மாற்றத்தை கொண்டு வரக்கூடியது. வாங்குவோர் மற்றும் பில்டர்கள் நடுவே நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.. ஒட்டுமொத்தமாக, அரசாங்கம் அதன் இலக்குகளை நிறைவேற்றுவதில் ஒரு நல்ல தொடக்கத்தை உருவாக்கியுள்ளது, ஆனால் இது முழு வெற்றியா என்ற முக்கிய மதிப்பீட்டை செய்வதற்கு முன்னதாக இன்னொரு நிதியாண்டுக்காக காத்திருக்க வேண்டும்.

English summary
The Modi government has promised to provide 'Housing for All; by 2022. Various housing schemes of the government like the Rajiv AwasYojana, Indira AwasYojana etc. have been subsumed under the Pradhan MantriAwasYojana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X