வாள் தூக்கி வந்தான் பாரு! மேட்சையே மாற்றிய அஸ்வின்.. வங்க தேசத்தை வீழ்த்தியது எப்படி? 4 காரணங்கள்!
டாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. முதல் போட்டியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்திய இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றிக்கு அருகே வந்து திணறிக்கொண்டு இருந்தது. இந்த நிலையில் அஸ்வின் - ஷ்ரேயாஸ் - அக்சர் அதிரடியால் இந்திய அணி வென்றுள்ளது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 227-10 ரன்களை எடுத்தது. 73.5 ஓவர்கள் மட்டுமே பிடித்த வங்கதேசம் உமேஷ் 4 விக்கெட், அஸ்வின் 4விக்கெட் எடுத்த காரணத்தால் சுருண்டது.

இந்திய அணி
அதன்பின் இறங்கிய இந்திய அணியில் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆனாலும் ரிஷாப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நின்று நிதானமாக ஆடினார்கள். பண்ட் 93 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் 87 ரன்கள் எடுத்தார். இதனால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 314-10 ரன்கள் எடுத்தது. இதன்பின் இரண்டாவது இன்னிங்ஸ் இறங்கிய வங்கதேசம் அணி தொடக்கத்தில் இருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அக்சர் 3 விக்கெட், அஸ்வின் 2 விக்கெட் எடுத்து அசத்தினர். இதனால் வங்கதேசம் 231-10 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஆனால் 45-4 ரன்கள் எடுத்து இந்திய திணறிக்கொண்டு இருந்தது. 4வது நாள் ஆட்டமான இன்று இந்திய அணி 6 விக்கெட்டை இழக்கும் முன் 100 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் அஸ்வினின் 42, ஷ்ரேயாசின் 29 ரன்கள் காரணமாக இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதில்.

வெற்றி
இதையடுத்து களமிறங்கிய பண்ட் வெறும் 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இவரை இந்திய அணி அதிகம் நம்பி இருந்த நிலையில் பண்ட் விக்கெட் காரணமாக இந்தியா தோல்விக்கு அருகே சென்றது. அதன்பின் 34 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அக்சர் பட்டேலும் அவுட் ஆனார். இதனால் கடைசியில் இந்திய அணி ஷ்ரேயாஸ் ஐயர், அஸ்வின் ஆகியோரை மட்டும் நம்பி இருந்தது. இத்தனை பேர் வரிசையாக விக்கெட்டுகளை இழந்ததால் இவர்களாவது களத்தில் நிற்பார்களா என்ற கேள்வி இருந்தது.

காரணம்
ஆனால் ஒரு பக்கம் ஷ்ரேயாஸ் கொஞ்சம் திணறலாக ஆடினாலும் கூட அஸ்வின் அதிகம் நம்பிக்கை அளித்தார். தொடக்கத்தில் இருந்தே பெரிதாக டென்சன் ஆகாமல் அஸ்வின் ஆடினார். பிட்ச் நேற்றும், இன்றும் ஸ்பின் பவுலிங் செய்ய அதிக சாதகமாக இருந்தது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டுதான் இன்று அஸ்வின் சிறப்பாக ஆடினார். இன்று அஸ்வின் இறங்கிய போது இந்திய அணி 74-7 ரன்கள் எடுத்து திணறிக்கொண்டு இருந்தது. இதன்பின் இறங்கிய அஸ்வின்

என்ன நடந்தது?
62 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இன்று இந்தியா வெற்றிபெற இந்த 4 விஷயங்கள் முக்கிய காரணமாக இருந்தது. 1 விஷயம் அஸ்வின் - ஷ்ரேயாஸ் பார்ட்னர்ஷிப். இரண்டு பேருமே ஸ்பின் பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டனர். ஸ்பின் பவுலிங்தான் இந்த ஆட்டத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தியது. இந்தியாவின் டாப் ஆர்டர் சரிந்ததே இதனால்தான். மெஹ்தி ஹாசன், ஷாகிப் ஆகியோர் இந்தியாவிற்கு எதிராக எளிதாக விக்கெட் எடுக்க இதுவே காரணம். ஆனால் அஸ்வின் ஆப் ஸ்பின் பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டார்.

மேட்ச்
2வது விஷயம், ஷ்ரேயாஸ், அஸ்வின் இருவரும் பயம் இன்றி ஆடினார்கள். ஆனால் அதற்கு முன் கோலி, ராகுல், புஜாரா, பண்ட் என்று டாப் ஆர்டர் வீரர்கள் பலரும் பயத்துடன்தான் ஆடினார்கள். இந்த பயம் அஸ்வினிடம் இல்லை. மூன்றாவது விஷயம், பாகிஸ்தான் பேட்டிங் இன்னிங்சில் இந்திய அணியின் பவுலிங் சிறப்பாகவே இருந்தது. முக்கியமாக இந்திய அணியின் ஸ்பின் பவுலிங் ஜோடியான அஸ்வின் - அக்சர் ஜோடி சிறப்பாக இருந்தது.முக்கியமாக மைதானம் பிட்சிற்கு சாதகமாக இருந்ததை அஸ்வின் நன்றாக பயன்படுத்திக்கொண்டார்.

ஷ்ரேயாஸ்
கடைசியாக, இரண்டு இன்னிங்சிலும் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவரின் பேட்டிங் டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக உள்ளது.
- 105 (171).
- 65 (125).
- 18 (41).
- 14 (8).
- 27 (48).
- 92 (98).
- 67 (87).
- 15 (11).
- 19 (26).
- 86 (192).
- 87 (105).
- 29* (46).
- 624 ரன்களை 56.72 என்று ஆவரேஜில் ஷ்ரேயாஸ் எடுத்துள்ளார். இவரின் ஆட்டம் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications