இனிமேலும் எடுக்காதீங்க.. நேரடியாக ரோஹித்திற்கு பிரஷர் போட்ட பிசிசிஐ.. ராகுல் நீக்கம்.. நடந்தது என்ன?
பெரும்பாலும் கே எல் ராகுல் ரஞ்சிக்கு திரும்புவார்.
இந்தூர்: இந்திய அணியில் இருந்து கே. எல் ராகுல் நீக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து உள்ளதாம். முக்கியமாக பிசிசிஐ இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு உள்ளதாம்.
இந்தியாவில் பொதுவாக 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வதில் கேப்டன் தலையீடு இருக்காது. தோனி கேப்டனாக இருந்தவரை 15 பேர் கொண்ட குழுவை தேர்வு செய்வதிலும் அவர்தான் முடிவுகளை எடுத்தார்.
அவர் எடுக்கும் முடிவுகள் 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வதிலும் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் தோனி போன பின் இது போன்ற தேர்வுகளை கேப்டன்கள் செய்ய முடியவில்லை.

கேப்டன்
இந்த நிலையில்தான் இன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. தற்போது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே இந்தியா வென்றுவிட்டது. இதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்க வைத்து உள்ளது. மூன்றாவது டெஸ்ட் இன்று இந்தூரில் நடக்கிறது. இன்று நடக்கும் மேட்சில் இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேட்ச்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ ஆகியோர் ஆடுகிறார்கள். முதல் இரண்டு போட்டிகளில் மோசமாக சொதப்பிய ராகுல் இன்று நீக்கப்பட்டு உள்ளார்.

டெல்லி
டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் கே. எல் ராகுல் சொதப்பி வெறும் 1 மட்டுமே எடுத்தார் . முதல் இன்னிங்சில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நாக்பூர் டெஸ்டில் இவர் முதல் இன்னிங்சில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். முக்கியமாக இரண்டாவது டெஸ்ட் மேட்சில் அவர் ஆடிய விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. கடந்த 2017ல் இருந்து 49 டெஸ்ட் போட்டிகளில் கே. எல் ராகுல் ஆடி இருக்கிறார். இதில் 25 ஆவரேஜ் மட்டுமே வைத்துள்ளார். 2, 10, 23, 22, 10, 12, 8, 10, 2 இதுதான் இந்த தொடருக்கு முன்பாக கடைசியாக 9 டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுல் எடுத்த ரன்கள். இப்படி ஒரு வீரருக்குத்தான் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஆவரேஜ் மோசம்
கடந்த 20 வருடத்தில் இவ்வளவு குறைவான ஆவரேஜ் கொண்ட ஒப்பனர் இந்திய அணியில் இருந்ததே இல்லை. இந்த நிலையில்தான் ராகுலை நீக்குவது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக பிசிசிஐ ஆலோசனைகளை மேற்கொண்டு உள்ளது. பொதுவாக 15 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐதான் முடிவு எடுக்கும். அதாவது தேர்வுக்குழு முடிவு எடுக்கும். ஆனால் 11 பேர் கொண்ட அணியை கேப்டன் - பயிற்சியாளர்தான் தேர்வு செய்வார்கள். இதில் பிசிசிஐ தலையிடாது. ஆனால் இந்த முறை ராகுலை நீக்குவதில் நேரடியாக பிசிசிஐ டாப் தலைகள் தலையிட்டதாக கூறப்படுகிறது.

ரோஹித் விருப்பம்
ராகுலை நீக்க ரோஹித் விரும்பவில்லை. கில்லை அணியில் எடுக்க வேண்டும் என்றால் அவரை மிடில், ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கலாம். அவருக்கு இன்னும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றுதான் ரோஹித் நினைத்து இருக்கிறாராம். ஸ்ரீகர் பரத்தை நீக்கலாம் என்றுதான் அவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவே அவர் 11 பேர் கொண்ட அணி தேர்வின் போதும் பேசி இருக்கிறாராம். ஆனால் இதை கேட்டதும் மீட்டிங்கில் இருந்த பிசிசிஐ அதிகாரிகள் சிலர் கோபம் அடைந்து உள்ளனர். ராகுல் தொடர்ந்து சொதப்பிவிட்டார். அவரின் ஆவரேஜ் 30க்கும் கீழ் உள்ளது. இவரை எல்லாம் அணியில் எடுக்கவே கூடாது.

ரஞ்சி ஆடட்டும்
அவர் மீண்டும் ரஞ்சி ஆடட்டும். அதில் அவர் பார்மிற்கு திரும்பட்டும். பரத் இரண்டு போட்டிகளில் ஆடி இருக்கிறார். அவரை போய் மொத்தமாக நீக்குவது சரியாக இருக்காது என்று கூறி உள்ளனர். 11 பேர் கொண்ட அணி தேர்வில் நேரடியாக தலையிட்டு ரோஹித் சர்மாவிற்கு இவர்கள் நேரடியாக பிரஷர் போட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. நேற்று ராகுல் தொடர்பான கேள்விக்கு ரோஹித் சர்மா அளித்த பதிலில், பிளேயிங் லெவன் இறுதி செய்யப்பட்டபின் அறிவிக்கப்படும். அதற்கு முன் சொல்ல முடியாது. துணை கேப்டன் பதவி மாற்றப்படுகிறது என்பதற்காக ஒருவரை அணியில் இருந்து நீக்குகிறார்கள் என்று சொல்ல முடியாது.

நீக்கம்
துணை கேப்டன் நீக்கத்தை வைத்து யூகம் செய்ய முடியாது. அப்படி செய்வது தவறு. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் இந்த பேச்சுக்கு சூசகமாக ராகுலுக்கு ஆதரவு தெரிவிப்பது போல இருந்தது . இத கருத்தைதான் அவர் பிசிசிஐ மீட்டிங்கிலும் சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால் ராகுலை நீக்குவதில் பிசிசிஐ தலைகள் உறுதியாக இருந்துள்ளனர். இதையடுத்தே அவரை அணியில் இருந்து நீக்கி உள்ளனர். இனி டெஸ்ட் அணிக்கு ராகுல் திரும்புவது மிகவும் கடினம் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள். பெரும்பாலும் கே எல் ராகுல் ரஞ்சிக்கு திரும்புவார். ரஞ்சி போட்டிகளில் அவர் கவனம் செலுத்துவார். அதன்பின் அதில் பார்மிற்கு திரும்பினால் மீண்டும் இந்திய அணிக்குள் ராகுல் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போதைக்கு அவர் இந்திய அணிக்குள் வர வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications