ஒரே ஒரு மீட்டிங்! பில் கேட்ஸை ஹைதராபாத்தில் முதலீடு செய்ய வைத்த சந்திரபாபு நாயுடு! இந்த கதை தெரியுமா
அமராவதி: ஆந்திர முதல்வராக மீண்டும் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ள நிலையில், அவர் ஹைதராபாத்தில் முதலீடு செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸை சம்மதிக்க வைத்தார் என்பது குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அங்குள்ள 175 சீட்களில் தெலுங்கு தேசம் மட்டும் 135 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

இதையடுத்து ஆந்திரப் பிரதேச முதல்வராக நான்காவது முறையாகத் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்று உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சந்திரபாபு நாயுடு: சந்திரபாபு நாயுடு முதன்முதலில் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக 1995இல் பதவியேற்றார். ஆந்திராவைக் குறிப்பாக ஹைதராபாத்தில் பல்வேறு டெக் நிறுவனங்களும் முதலீடு செய்துள்ள நிலையில், அதில் சந்திரபாபு நாயுடுவின் பங்கு மிக முக்கியமானது. இன்று உலகின் பல முக்கிய ஐடி நிறுவனங்களும் தங்கள் ஆபீசை ஹைதராபாத்தில் நிறுவியுள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணமே சந்திரபாபு நாயுடு தான்.

அதிலும் குறிப்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் முதலீடு செய்ய சந்திரபாபு நாயுடுவே நேரடியாக பில்கேட்ஸை சம்மதிக்க வைத்திருக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த AP AgTech உச்சி மாநாட்டில், 1990களில் பில்கேட்ஸ் உடனான சந்திப்பின் போது என்ன நடந்தது என்பதை சந்திரபாபு நாயுடுவே மேடையில் பகிர்ந்து இருந்தார். அது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம்.
பில் கேட்ஸ் அப்பாயின்மென்ட்: சந்திரபாபு நாயுடு அந்த மேடையில் பேசுகையில், "பில் கேட்ஸ் ஏதோ வேலைக்காக டெல்லி வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.. உடனடியாக அவரை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டேன். இருப்பினும், அவர் மிகவும் பிஸியாக இருப்பதாகச் சொன்னார்கள். கண்டிப்பாகச் சந்தித்தே தீர வேண்டும் என்றால் மாலையில் நடக்கும் பார்ட்டியில் கலந்து கொள்ளலாம் என்று மட்டும் சொன்னார்கள்.

இந்த வாய்ப்பை விட நான் தயாராக இல்லை. உடனே லேப்டாப்பில் ஒரு பிரசன்டேஷனை ரெடி செய்தேன்.. மாநிலத்திற்கு முதலீடு பெற வேண்டும் என்பதற்காக நானாகவே அந்த பிரசன்டேஷனை தயார் செய்தேன். இதுபோல செய்த ஒரே அரசியல்வாதி நானாகவே இருப்பேன்.
40 நிமிடங்கள்: முதலில் பில் கேட்ஸ் எனக்கு 10 நிமிடம் மட்டுமே ஒதுக்கி இருந்தார். இருப்பினும், எனது பிரசன்டேஷனை பார்த்த பில் கேட்ஸ் கடைசியில் 40 நிமிடங்கள் நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டார். பிறகு மைக்ரோசாஃப்ட் அமெரிக்காவிற்கு வெளியே தங்கள் மையத்தைத் திறக்கும் போது ஹைதராபாத் நிச்சயம் பரிசீலனை லிஸ்டில் இருக்கும் என உறுதி அளித்தார்.

மைக்ரோசாஃப்ட்: அவர் சொன்னது போலவே மைக்ரோசாஃப்ட் ஹைதராபாத்தில் அதன் மேம்பாட்டு மையத்தைத் திறந்தது மட்டுமின்றி.. நம்ம ஊரைச் சேர்ந்த சத்யா நாதெல்லா இப்போது மைக்ரோசாஃப்ட் சிஇஓ ஆகவும் இருக்கிறார்" என்று கூறியிருந்தார். அவரது அந்தப் பேச்சை இப்போது இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடு- பில் கேட்ஸ் இடையேயான அந்த சந்திப்பு 1990களில் நடந்துள்ளது. அதன் பிறகு 1998இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது மேம்பாட்டு மையம் ஹைதராபாத்தில் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது..
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications