ஆடையை.. திடீர்னு களைந்து நின்ற பெண்.. திணறிய தொழிலதிபர்.. லேட்டா வந்த ஞானோதயம்.. போலீசுக்கு ஓட்டம்
நிர்வாண வீடியோகால் மூலம் பணம் பறித்த கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள்.
காந்திநகர்: ஒரு கும்பல் தன்னை ஏமாற்றுகிறது என்று தெரியாமலேயே, கடைசிவரை பல லட்சங்களை இழந்துள்ளார் தொழிலதிபர் ஒருவர்.. இறுதியாக, இப்போதுதான் சைபர் கிரைம் போலீசுக்கு சென்றுள்ளார்.
தொழில்நுட்பங்கள் பெருக பெருக, குற்ற சம்பவங்களும் பெருகி வருகின்றன.. நேற்றுகூட சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது.. மெசேஜ்ஜில் லிங்க் அனுப்பி ரூ.3.28 லட்சம் பணத்தை நூதன முறையில் வங்கிக் கணக்கில் 2 பேர் திருடி இருக்கிறார்கள்..
அதாவது, 12 ரூபாயில் மின்கட்டணம் செலுத்தலாம் என்று சென்னையை சேர்ந்த அனந்தராமன் என்பவருக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது.. அந்த லிங்க்கை கிளிக் செய்து பார்த்தால், அனந்தராமன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.98 லட்சம் திருடப்பட்டுள்ளது. தெரியவந்தது.

கரண்ட் பில்
இதேபோல் சென்னையைச் சேர்ந்த ஹரீஸ் என்பவர் மனைவியின் செல்போனுக்கு மெசேஜ் வந்தது. அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.30 லட்சம் பணம் திருடப்பட்டது.. 2 வழக்குகளை விசாரித்த சைபர் கிரைம் போலீசார் மோசடியில் ஈடுபட்டது அரியானாவை சேர்ந்த கும்பல் என்று கண்டுபிடித்து, மஞ்சித் சிங், நாராயண சிங்கை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். இப்படி எத்தனையோ மோசடிகள் அதிகரித்து வருகின்றன.. செல்போன்களில் முன்பின் தெரியாதவர்களிடம் நம்பி ஏமாற வேண்டாம் என்று போலீஸ், பலமுறை எச்சரித்தும் ஏமாறுபவர்களும், ஏமாற்றுபவர்களும் அதிகரித்தபடியே உள்ளனர்.

நிர்வாண கால்
இதோ குஜராத் மாநிலத்தில், ஒருவர் ஏமாந்துபோய், பல லட்சங்களை இழந்தபிறகுதான், போலீசுக்கு ஓடியுள்ளார்.. அவர் ஒரு பிசினஸ்மேன்.. மாற்று எரிசக்தி துறையில் தொழில் செய்து வருகிறார்.. கடந்த வருடம் இவருக்கு ஒரு பெண் புதிதாக அறிமுகமாகியுள்ளார்... தன்னுடைய பெயர் ரியா ஷர்மா என்றும், மொர்பி பகுதியை சேர்ந்தவர் என்றும் சொன்னாராம்.. இவருக்கும் நட்பு ஏற்பட்டு, அது வீடியோகால் பேசும் அளவுக்கு வந்துவிட்டது. அந்த பெண் ஒருநாள், தொழிலதிபரிடம், வீடியோ காலில் பேசியுள்ளார்.. அப்போது டிரஸ் இல்லாமல், நிர்வாணமாகவே நின்றுள்ளார் அந்த பெண்.. பிறகு, அந்த அதிகாரியையும் டிரஸ்களை கழற்றுமாறு சொல்லியிருக்கிறார்...

ஆடைகளை களைந்து
ஏற்கனவே மண்டை நிறைய சபலத்தில் சிக்கியிருந்த அதிகாரியும், அந்த பெண் சொன்னது போலவே, தன் ஆடைகளை களைந்துள்ளார். அதை ரிக்கார்ட் செய்து வைத்துக் கொண்ட அந்த பெண், தனக்கு ரூ.50,000 பணம் அனுப்ப வேண்டும் இல்லை என்றால், இந்த வீடியோவை கசிய விட்டுவிடுவேன் என்று பிளாக் மெயில் செய்துள்ளார்.. இதனால் பதறிப்போன பிசினஸ்மேன், ரூ.50,000 உடனடியாக அனுப்பியுள்ளார்... அடுத்த கொஞ்ச நேரத்தில், யாரோ ஒரு நபர், தொழிலதிபருக்கு போன் செய்துள்ளார்.. தான் ஒரு டெல்லி போலீஸ் எனவும், ஆபாச வீடியோவில் நிர்வாணமாக நின்றாயா? என்றும் கேட்டுள்ளார்..

அடங்கலயே
இதைக் கேட்டதும் தொழிலதிபருக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது.. அந்த வீடியோக்களை வெளியே விடாமல் இருக்க வேண்டுமானால், பணம் வேண்டும் என்று மிரட்டி உள்ளார்.. பயந்துபோன இவரும், 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருக்கிறார்.. அப்போதும் அந்த கும்பல் அடங்காமல், மேலும் மேலும் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளது.. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி அன்று டெல்லி சைபர் போலீஸில் இருந்து அழைப்பதாகவும், அந்த பெண் தற்கொலைக்கு முயன்றுவிட்டார் என்றும் மிரட்டி மறுபடியும் ரூ.80.97 லட்சம் பணத்தை தொழிலதிபரிடமிருந்து பறித்துள்ளனர்...

ஹைலைட்
அதற்கு பிறகு, பெண்ணின் அம்மா, சிபிஐ அணுகியதாக சொல்லி கூறி சிபிஐ அதிகாரிகளின் போர்வையில் ரூ.8.5 லட்சம் பணம் பறித்துள்ளனர்... இப்படியே பணத்தை லட்சம் லட்சமாக பிசினஸ்மேன் இழந்துகொண்டிருந்தாரே தவிர, அவருக்கு கடைசிவரை உண்மை தெரியவில்லை.. இதைவிட ஹைலைட் என்னவென்றால், டிசம்பர் 15ம் தேதி இந்த கேஸ், முடிந்துவிட்டதாக டெல்லி ஹைகோர்ட் உத்தரவு என்ற பேரில் போலி ஆவணத்தை அந்த பிளாக் மெயில் கும்பல், பிசினஸ்மேனுக்கு அனுப்பியுள்ளது. அந்த ஆவணத்தை பார்த்தபிறகுதான், அது போலி என்று தெரியவந்திருக்கிறது..

கப்பலேறிய மானம்
தினமும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையில், கடைசிவரை ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்பதை அறிந்து, வேறு வழியின்றி போலீசுக்கு போனார்.. புகாரையும் தந்தார்.. அந்த பெண் தனி நபர் இல்லை.. அவருக்கு பின்னால் ஒரு கும்பலே இருக்கிறது என்றும், இதுகுறித்து நடவடிக்கை வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.. இதையடுத்து போலீசார், ஆபாச மோசடி கும்பலை பிடிக்க களமிறங்கினர்.. கடந்த ஜனவரி 10ம் தேதி அந்த தொழிலதிபர் சைபர் போலீசில் புகார் அளித்துள்ளார். பெண் உள்ளிட்ட 11 நபர்கள் மீது அந்த தொழிலதிபர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறை விசாரணையை இப்போது தொடங்கியிருக்கிறது. ஆனால், தூக்கமின்றி தவித்து கொண்டிருக்கிறாராம் அந்த தொழிலதிபர்..!!
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications