For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாஜி ஆளுநர் சண்முகநாதன் படுக்கை அறைவரை சுதந்திரமாக சென்றுவந்த இளம்பெண்கள்- பரபரப்பு தகவல்

மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் அம்மாநில ராஜ்பவனை எப்படியெல்லாம் இளம்பெண்கள் கிளப்பாக மாற்றி வைத்திருந்தார் என ஆளுநர் மாளிகை ஊழியர்களே ஜனாதிபதி, பிரதமருக்கு எழுதி அனுப்பியுள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

ஷில்லாங்: மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனின் சல்லாப லீலைகள் குறித்து பக்கம் பக்கமாக ஜனாதிபதி, பிரதமர் அலுவலகத்துக்கு 100-க்கும் மேற்பட்ட ராஜ்பவன் ஊழியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் சண்முகநாதனின் படுக்கை அறை வரை இளம்பெண்கள் சுதந்திரமாக சென்று வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த பிரமுகர்தான் சண்முகநாதன் என அனைத்து ஆங்கில ஊடகங்களும் சுட்டிக் காட்டுகின்றன.

இந்த நிலையில் ராஜ்பவனில் பிஆர்ஓ பணிக்காக நேர்முகத் தேர்வின் போது இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் சண்முகநாதன் என ஒரு புகார் எழுந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து தற்போது சண்முகநாதன் மீது சல்லாப புகார்கள் அடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து சண்முகநாதன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

11 விவகாரங்கள்...

11 விவகாரங்கள்...

இதனிடையே மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ராஜ்பவன் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஜனாதிபதி, பிரதமருக்கு 5 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் 11 விவகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இளம்பெண்கள் கிளப்

இளம்பெண்கள் கிளப்

இதில் பெரும்பாலானவை ராஜ்பவனை எப்படியெல்லாம் இளம்பெண்கள் கிளப்பாக மாற்றியிருந்தார் சண்முகநாதன் என்ற விவரங்கள்தான்.. ஆளுநராக சண்முகநாதன் பதவியேற்ற உடனே ராஜ்பவன் செயலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பலரும் மாற்றப்பட்டனராம்.

படுக்கை அறைவரை...

படுக்கை அறைவரை...

அவர்கள் இடத்தில் 'இளம்பெண்கள்' மட்டுமே நியமிக்கப்பட்டனராம். இந்த இளம்பெண்கள் மேலதிகாரிகளின் உத்தரவுக்கு எல்லாம் காத்திருப்பதில்லையாம். நேராக சண்முகநாதனின் உத்தரவுகளைப் பெற்று வந்துவிடுவார்கள்... அதுவும் சண்முகநாதனின் படுக்கை அறைக்கே எந்த ஒரு அனுமதியும் இன்றி சுதந்திரமாக சென்றுவரக் கூடியவர்களாக இருந்தனராம்.

சின்மோயி, பானுமதி நியமனம்

சின்மோயி, பானுமதி நியமனம்

அதேபோல் சண்முகநாதன் தனக்கான பிஏவாக அஸ்ஸாமைச் சேர்ந்த சின்மோயி தேகா என்பவரை முதலில் நியமித்தார். பின்னர் அவரை பிஆர்ஓ பதவியில் அமர்த்தினார். சென்னையைச் சேர்ந்த பானுமதி என்பவரை தம்முடைய சமையலராகவும் சண்முகநாதன் நியமித்துக் கொண்டார்.

சகல வசதிகளுடன்...

சகல வசதிகளுடன்...

இவர்களுக்கு ஊதியம் தரப்படும் அதே நேரத்தில் ராஜ்பவனில் அனைத்து வசதிகளும் இலவசமாகவே செய்து தர சண்முகநாதன் உத்தரவிட்டிருந்தாராம். சின்மோயி தேகாவின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இளம்பெண்கள். அவர்களும் ராஜ்பவனில் சகல வசதிகளுடனும் அடிக்கடி வந்து தங்கிச் செல்வார்களாம்.

ஒரே அறையில்

ஒரே அறையில்

மேலும் மணிப்பூர் மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு சண்முகநாதனுக்கு கொடுக்கப்பட்டது. அப்போது இம்பாலில் உள்ள ராஜ்பவனில் பிஆர்ஓ சின்மோயி தேகாவுடன் ஒரே அறையில்தான் சண்முகநாதன் தங்கியிருந்தார் என நீள்கிறது அந்த புகார் பட்டியல்.

English summary
V Shanmuganathan on Thursday resigned as the Governor of Meghalaya following allegations of inappropriate behaviour. He was accused of hurting the decorum of the Raj Bhavan. The allegations came to light after nearly 100 employees of the Raj Bhavan in Shillong sent a five page letter to the Prime Minister's Office and the Rashtrapathi Bhavan. In the letter they accused the Governor of turning the Raj Bhavan into a 'Young Ladies Club
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X