பழம் மட்டுமே உணவு.. தூங்குவது இப்படித்தான்! ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி விரதம் இருப்பது எப்படி?
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலுக்காக பிரதமர் மோடி விரதம் இருந்து வருகிறார். ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி தனது 11 நாள் விரத காலத்தில் எந்த வகையான உணவு எடுத்து கொள்கிறார். இரவில் தூங்குவது எப்படி? என்பது தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அயோத்தி ராமர் கோவில்.. பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளாக இருந்து வந்தது. இந்த தேர்தல் வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அங்கு பணிகள் தொடங்கியது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மொத்தம் 3 அடுக்குகளாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. நாகரா கட்டக்கலை நுட்பத்துடன் சிற்பங்கள் கொண்ட தூண்கள் அமைத்து கோவில் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது கோவிலில் முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவைடைந்துள்ளன. இதையடுத்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் இன்று முதல் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் தான் ஜனவரி 22ம் தேதி நடக்கும் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதையடுத்து அவர் 11 நாள் விரதத்தை தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கம் மற்றும் ஆடியோ மெசேஜில் கூறியிருந்தார். அதில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு நாளான ஜன. 22-ம் தேதியை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்கு இன்னும் 11 நாட்களே உள்ளன. வாழ்வில் முதல் முறையாக தனித்துவமான உணர்வு, தெய்வீக அனுபவத்தை உணர்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது பல தலைமுறை கனவு. அதை நிறைவேற்றுவதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
மோடி பக்தர்கள் பைத்தியக்காரர்களா? கொந்தளித்த சுப்பிரமணியன் சாமி.. பரபர சண்டை.. என்ன நடந்தது?
நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி, கடவுளை வழிபடுவதற்கு நமக்குள் தெய்வீக உணர்வைஎழுப்ப வேண்டும். ராமர் சிலை பிரதிஷ்டைக்கு முன்பு பின்பற்ற வேண்டிய உறுதிமொழிகள், விதிகளை வேதங்கள் எடுத்துரைக்கின்றன. இதன்படி 11 நாட்கள் விரதத்தை தொடங்குகிறேன் என தெரிவித்து இருந்தார். அதன்படி பிரதமர் மோடி விரதத்தை கடைப்பிடித்து வருகிறார்.
பிரதமர் மோடி யாம விதிகளை பின்பற்றி விரதத்தை கடைப்பிடித்து வருகிறார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி வரும் நாட்களில் இன்னும் தனது விரதத்தை தீவிரமாக்க உள்ளார். அதாவது கும்பாபிேஷகத்துக்கு 3 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி சொகுசு படுக்கையில் தூங்காமல் இருப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாறாக அவர் மரக்கட்டிலில் போர்வை விரித்து தூங்க உள்ளார்.
‛‛ராமர் பக்தர்கள் குரங்குகளோடு ஒப்பீடு’’.. காங்கிரஸ் தலைவரால் சர்ச்சை.. யார் இந்த சத்ய பிரகாஷ்?
அதுமட்டுமின்றி அந்த 3 நாட்களும் பிரதமர் மோடி பழங்களை மட்டுமே உணவாக எடுத்து கொள்ள உள்ளார். இந்த நாட்களில் அவர் சில மந்திரங்களையும் உச்சரிக்க உள்ளார். மேலும் கோவிலுக்காக தியாகம் செய்தவர்களின் அடையாளமாக அமைக்கப்பட்டுள்ள ஜடாயு சிலையை பிரதமர் மோடி வணங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications