For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திரத்தில் புயலால் ரூ.70,000 கோடி சேதம்: சந்திரபாபு நாயுடு

By Mathi
Google Oneindia Tamil News

விசாகப்பட்டினம்: ஆந்திரத்தில் ஹூட் ஹூட் புயலால் ரூ.70,000 கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:

Hudhud: Relief pours in, Rs 70,000 crore sought

புயலால் கடலோர மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்கட்ட மதிப்பீட்டில், ரூ.70,000 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் மீட்புப் பணிக்கும், மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கும் முன்னுரிமை கொடுத்து வருகிறோம். புயல் சேதத்தை மதிப்பிட மத்திய அரசின் குழு, ஓரிரு நாள்களில் வரும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

English summary
Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu said here on Wednesday that the exact financial loss caused by Cyclone Hudhud was yet to be calculated though preliminary estimates indicated that it would be around Rs 70,000 crore and might go up further.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X