மன்னிச்சிடுங்கம்மா.. பீஸ் கட்டாததால் அவமானப்படுத்தப்பட்ட பள்ளி மாணவி.. லெட்டர் எழுதிவிட்டு தூக்கு
ஹைதராபாத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் லெட்டர் எழுதிவிட்டு தூக்கிவிட்டு தற்கொலை செய்து இருக்கிறார்.
Recommended Video

ஹைதராபாத்: சமீப காலங்களில் இந்தியாவில் பள்ளி மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அதேபோல் பள்ளி நிர்வாகம் மாணவர்களை மோசமாக நடத்தும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது.
ஒவ்வொரு மாநில அரசும் பள்ளிகளுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் விதித்தாலும் இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்து விடுகிறது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் இதே போல் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.
அங்கு இருக்கும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கிறார். பள்ளியில் மோசமாக நடத்தியதாக லெட்டர் எழுதி வைத்து இருக்கிறார்.

எக்ஸாம் பீஸ்
தற்கொலை செய்து கொண்ட அந்த மாணவி அங்கு இருக்கும் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் சகோதரியும் அதே பள்ளியில் படித்து வருகிறார். தேர்வுக்கான பீஸ் கட்டவில்லை என்று அந்த மாணவியை இரண்டு நாட்களாக பள்ளி நிர்வாகம் கண்டித்து இருக்கிறது.

எழுதவில்லை
இந்த நிலையில் நேற்று நடந்த தேர்வை எழுத அந்த மாணவி அனுமதிக்கப்படவில்லை. மேலும் எல்லோர் முன்னிலையிலும் அந்த மாணவி மிகவும் மோசமாக நடத்தப்பட்டு இருக்கிறாள். இது குறித்த அந்த சிறுமி தன் தங்கையிடம் சொல்லி அழுது உள்ளாள்.

தூக்கு
இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு சென்ற அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கிறார். வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு இருக்கிறார். தற்போது இவர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்ப்பட்டு இருக்கிறது.

லெட்டர்
அந்த மாணவி தன்னுடைய ஆடையில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் ''மன்னிச்சிடுங்கம்மா, என்னை அவங்க எக்ஸாம் எழுதவிடல'' என்று எழுதி உள்ளாள். தற்போது போலீஸ் அந்த பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
-
பள்ளிகளுக்கு 155 நாட்கள் லீவு! காலண்டர் வெளியீடு! அதிகபட்சம் விடுமுறை எந்த மாதம்? கல்வித்துறை லிஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications