மரணஓலம்.. கை, கால்கள் துண்டாகி துடிதுடித்த மக்கள்! ஒடிசா ரயில் விபத்தில் தப்பிய பயணி திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிசாவில் தடம்புரண்ட கோரமண்டல் ரயில் மீது ஹவுரா மற்றும் ஒரு சரக்கு ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 50 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 350க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த நபர் திடுக்கிடும் வைக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி இன்று கோரமண்டல் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தார். ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் அருகே இன்று இரவு இந்த ரயில் தடம் புரண்டது.

I saw many people with missing legs and hands, Passenger describes horrifying moment when trains collided in Balasore

இதையடுத்து அந்த வழியாக வந்த பெங்களூர் யஷ்வந்தபுரம்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. அதற்கு பிறகு சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

பொதுவாக இந்தியாவில் ரயில் தடம்புரள்வது அவ்வப்போது நடக்கும். ஆனால் இன்று தடம்புரண்ட ரயில்கள் மீது ஒரு பயணிகள் ரயில், சரக்கு ரயில் அடுத்தடுத்து மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது அபூர்வமான விபத்து என்ற நிலையில் தான் கோரமான விபத்தாக இது கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த விபத்தில் மொத்தம் 50 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 350க்கும் அதிகமானவர்கள் காயம்டைந்துள்ளனர்.

I saw many people with missing legs and hands, Passenger describes horrifying moment when trains collided in Balasore

காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்பட உயரதிகாரிகள் விரைந்துள்ளனர். ஒடிசா அரசு சார்பில் 4 ஒடிசா மாநில பேரிடர் மீட்பு குழுவினர், 3 தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் விரைந்துள்ளனர். மேலும் மீட்பு பணியில் மொத்தம் 65 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ரயில் விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கூடுதல் டாக்டர்கள் மருத்துவமனைகளில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பிற மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் விரைந்துள்ளனர். அதோடு அண்டை மாவட்டங்களில் உள்ள டாக்டர்கள் விபத்து நடந்த இடம் மற்றும் அதன் அருகே விரைந்துள்ளனர்.

I saw many people with missing legs and hands, Passenger describes horrifying moment when trains collided in Balasore

இந்நிலையில் தான் தடம்புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பெங்களூர் யஷ்வந்தபூர் -ஹவுரா ரயில் மோதி விபத்துக்குள்ளானது பற்றியும், விபத்து நடந்த சமயத்தில் பயங்கரத்தையும் உயிர் பிழைத்த ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் விவரித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛விபத்து நடந்தபோது நான் ரயிலில் தூங்கி கொண்டிருந்தேன். விபத்து நடந்தபோது பயங்கர சத்தம் கேட்டது. இதனால் நான் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு கண்விழித்தேன்.

நான் கண்விழித்தபோது கண்ட காட்சி என் நெஞ்சை பதைபதைத்தது. ஏனென்றால் நான் கண்விழித்தபோது 10 முதல் 15 பேர் என் மீது விழுந்து கிடந்தனர். எனக்கு கை, தயைில் காயம் ஏற்பட்டுள்ளது. இது வலித்தது. அப்போது தான் விபத்து நடந்ததை நன் உணர்ந்தேன். பதறியபடி ரயில் பெட்டியில் இருந்து வெளியே வந்து பார்த்தேன். அப்போது கை, கால்களை இழந்து துடித்த பலரை நேரில் கண்டேன். அவர்கள் அனைவரும் காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினர். இதுபோன்ற காட்சியை நான் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதைபதைக்கிறது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+