நில மோசடி... சோனியா மருமகன் ராபர்ட் வதேராவின் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நில மோசடிக் குற்றச்சாட்டுக்குள்ளான காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமும், டி.எல்.எப் என்ற கட்டுமான நிறுவனமும் இணைந்து நில மோசடி ஊழலில் ஈடுபட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தன.

2012 ஆம் ஆண்டு அக்டோபரில் இதனை அம்பலப்படுத்திய ஹரியானாவின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா பந்தாடப்பட்டார். இந்த நிலையில் ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் நிதி விவரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பி வருவாய்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மொத்தம் 22 கேள்விகளை எழுப்பி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸுக்கு பதிலளிக்க 2 வார கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications