எனக்கோ, மனைவிக்கோ இந்தியாவை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை: ஆமீர்கான் பல்டி
மும்பை: சகிப்புத்தன்மை குறித்த சர்ச்சை பெரிதாகியுள்ள நிலையில், இந்தியராக இருப்பதில் பெருமை கொள்வதாகவும், தனக்கோ தனது மனைவிக்கோ இந்தியாவைவிட்டு வெளியேறும் எண்ண் இல்லை என்றும் நடிகர் ஆமீர்கான் தெரிவித்துள்ளார்.
சகிப்புத்தன்மையில்லா செயல்கள் இந்தியாவில் அரங்கேறுவதால், நாட்டை விட்டு வெளியேற தனது மனைவி விரும்பியதாக நடிகர் ஆமீர்கான் கூறியிருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து சமூக தளங்களில் கருத்து பதிவு செய்தனர்.

ஆமீர்கான் விளம்பர தூதராக உள்ள ஸ்நாப்டீல் நிறுவனத்தின், அப்ளிகேஷன்களை டெலிட் செய்து நூதன எதிர்ப்பை சுமார் 1 லட்சம் நெட்டிசன்கள் காண்பித்தனர். இந்த பேச்சுக்காக அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆமீர்கான் இன்று வெளியிட்ட அறிக்கை: நான் என்ன கூறினேனோ அதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால், என்னை யாரெல்லாம், தேசத்துக்கு எதிரானவன் என அழைத்தார்களோ, அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம், 'நான் பெருமைமிகு இந்தியன்' என்பதே.
நானோ எனது மனைவியோ, இந்தியாவைவிட்டு வெளியேறும் எண்ணத்தில் இல்லை. ஆனால், என்னை பார்த்து, தப்பாக பேசியவர்கள், நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்பதை நிரூபித்துவிட்டார்கள். இவ்வாறு ஆமீர்கான் தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications