வங்கி மோசடி பட்டியலில் ஐ.சி.ஐ.சி.ஐ முதலிடம்.. ரிசர்வ் வங்கி ஷாக் ரிப்போர்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வங்கிகளில் நடந்த மோசடிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஐசிஐசிஐ முதலிடத்தில் உள்ளது. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வங்கிகளில் நடந்த மோசடிகள் குறித்த ஆய்வு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

ICICI Bank, SBI, StanChart top bank frauds list: RBI

இப்பட்டியலில் 455 வழக்குகளுடன் தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 429 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மூன்று மற்றும் நான்காம் இடத்தில் ஸ்டாண்டர்டு சாட்டர்டு 244, எச்டிபசி வங்கியில் 237 வழக்குகள் உள்ளது. ஆக்ஸிஸ் வங்கியில் 189 மோசடி வழக்குகளும், பாங்க் ஆப் பரோடாவில் 176 மோசடி வழக்குகளும், சிட்டி வங்கியில் 150 மோசடி வழக்குகளும் நடந்துள்ளன.

மோசடிகளின் மதிப்பு அடிப்படையில் எஸ்பிஐ வங்கியில் ரூ.2,236.81 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளன. அடுத்ததாக பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.2,250.34 கோடிக்கும், ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.1998.49 கோடிக்கும் மோசடிகள் நடந்துள்ளன.

மோசடியில் ஈடுபட்ட வங்கிப் பணியாளர்களின் பெயர்ப் பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ளவர்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ICICI Bank topped the list of banks that witnessed most number of frauds during April-December period of 2016 with state-owned SBI taking the second spot. Other articles published on Mar 12, 2017
Please Wait while comments are loading...