''கடவுளுக்கு வாக்குரிமை இருந்தால் இடதுசாரிக்குதான் வாக்களிப்பார்''.. சொல்வது கொடியேறி பாலகிருஷ்ணன்!
கண்ணூர்: கடவுளுக்கு வாக்குகள் இருந்தால், அவர்களும் இடதுசாரி கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள் என்று சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இடது சாரி கூட்டணி 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறினார்.

கேரளாவில் தேர்தல்
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

பினராயி விஜயன் வாக்குப்பதிவு
கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது குடும்பத்தினருடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

100 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்
இந்த நிலையில் முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கன்னூர் கொடியேறியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் கூறியதாவது:- இடது சாரி கூட்டணி அனைத்து மாவட்டங்களிலும் வெற்றி விளிம்பில் உள்ளது. 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

கடவுளும் எங்களுக்கு வாக்களிப்பார்கள்
கடந்த காலங்களைப் போலல்லாமல் இந்த முறை அனைத்து மாவட்டங்களிலும் வெற்றி பெறுவதற்குரிய சூழ்நிலை எங்களுக்கு உள்ளது. கடவுளுக்கு வாக்குகள் இருந்தால், அவர்களும் இடதுசாரி கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள் என்று கொடியேறி பாலகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications