விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படாவிட்டால் புரட்சி வெடிக்கும்.. இவரு தலைவரு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படாவிட்டால் மகாராஷ்டிராவில் புரட்சி வெடிக்கும் என சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஜூலை மாதத்துக்குள் விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கெடு விதித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்றாம் தேதி விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர்.

பால் மற்றும் காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை தடுக்க முயன்ற காவல்துறையினர் கடந்த 6 ஆம் தேதி மாண்ட்சவூர் மாவட்டத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

சுட்டுக்கொல்லப்பட்ட விவசாயிகள்

சுட்டுக்கொல்லப்பட்ட விவசாயிகள்

இதில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கடன் தள்ளுபடி அறிவிப்பு

கடன் தள்ளுபடி அறிவிப்பு

இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக மகாராஷ்டிர விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கு முன்னதாக அம்மாநில அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

கைவிரித்த மத்திய அரசு

கைவிரித்த மத்திய அரசு

இதனிடையே விவசாய கடன் தள்ளுபடி செய்வதால் ஏற்படும் நிதிச்சுமையை மாநில அரசுகள் தான் ஏற்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இதனால் மகாராஷ்டிராவில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வது கேள்விக்குறியாகியுள்ளது.

எந்த புரட்சிக்கும் தயார்

எந்த புரட்சிக்கும் தயார்

விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படாவிட்டால் மஹாராஷ்டிராவில் புரட்சி வெடிக்கும் என சிவசேனா சிவசேனா உத்தவ் தாக்கரே தெரிவித்தார். மேலும் பசுமை புரட்சியை மேற்கொள்ளும் விவசாயிகள், எந்த புரட்சிக்கும் தயார் என்பதை போராட்டங்கள் மூலம் உணர்த்தி வருவதாகவும் அவர் கூறினார்.

புரட்சி வெடிக்கும்

புரட்சி வெடிக்கும்

வரும், ஜூலை மாதத்துக்குள், விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கெடுவிதித்தார். இல்லையெனில் மஹாராஷ்டிராவில் புரட்சி வெடிக்கும் என்றும் உத்தவ் தாக்கரே எச்சரித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Shiv Sena leader Uddhav Thackeray has said that if the farmers' loans are not canceled, the revolution will be blast. He also said that loan should be canceled by July
Please Wait while comments are loading...