உடல் எடையை குறைக்க வேண்டுமா, சிபிஐ கஸ்டடியில் செல்லுங்கள்.. கார்த்தி சிதம்பரம் கிண்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உடல் எடையை டயட் இன்றி குறைக்க வேண்டும் என்றால் சிபிஐ கஸ்டடியில் செல்ல வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கிண்டல் செய்து இருக்கிறார்.

மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும் படி சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து இருக்கிறது. இவர் கடந்த 12 நாட்களாக சிபிஐ கஸ்டடியில் இருந்தார்.

டைம் என்ன பாஸ்

டைம் என்ன பாஸ்

கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ எந்த விதமான மின்னணு சாதனமும் பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை. வாட்ச் போன் என எதையும் பயன்படுத்த அவர் அனுமதிக்கப்படவில்லை. இதனால் என்ன கிழமை, என்ன மணி என்பதை கூட இவர் அங்கு இருந்த சிபிஐ அதிகாரிகளுடன்தான் தெரிந்து கொண்டு இருக்கிறார்.

சாப்பாடு

சாப்பாடு

மேலும் ''யாராவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் சிபிஐ கஸ்டடியில் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஜிம், வாக்கிங், டயட் எதுவும் தேவையில்லை. இந்த சிபிஐ கேண்டீன் சாப்பாடே உடலை குறைக்க போதுமானது'' என்று கார்த்தி சிதம்பரம் காமெடியாக கிண்டல் செய்து இருக்கிறார்.

சிபிஐக்கு நன்றி

சிபிஐக்கு நன்றி

மேலும் ''என்னுடைய உடல் எடை மிகவும் குறைந்துவிட்டது. வெளியே சென்றதும் புதிய உடைகள் எடுக்க வேண்டும். இப்போது இருக்கும் உடைகள் எனக்கு பொருந்தாது. எனக்கு இவ்வளவு பெரிய நன்மை செய்த சிபிஐக்கு நன்றி'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

விதி

விதி

இதற்கு சிபிஐ தரப்பும் பதில் அளித்துள்ளது. அதில் ''நீதிமன்றம் சொன்ன முறைகளையே நாங்கள் விசாரணையில் பயன்படுத்தினோம். எல்லாமே விதிமுறைப்படியே நடந்தது. கார்த்தி சிதம்பரம் போதிய அளவிற்கு ஒத்துழைப்பும் தந்தார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If you want to lose weight, go to CBI custody says Karti Chidambaram. He spent 12 days in CBI custody. He had his food only form CBI canteen due to Court order.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற