ஜார்க்கண்ட் சுரங்க முறைகேடு: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 20 இடங்களில் அமலாக்கப் பிரிவு ரெய்டு
ராஞ்சி: சுரங்க முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக இன்று தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 20 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜே.எம்.எம்.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடுகளில் ஜே.எம்.எம்- காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த முரண்பாட்டை பாஜக தமக்கு சாதகமாக்க தீவிரமாக முயன்றும் வருகிறது.

அதாவது பல மாநிலங்களில் பாஜக அரங்கேற்றுவது போல ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஜே.எம்.எம்.- காங்கிரஸ் கூட்டணியை உடைப்பதில் தீவிரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு வியூகங்களுடன் பாஜக களமிறங்கி இருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
இன்னொரு பக்கம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை குறிவைத்து சுரங்க முறைகேடு வழக்கு விசாரணகள் தீவிரம் காட்டப்பட்டும் வருகின்றன. முதல் கட்டமாக முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா குறி வைக்கப்பட்டார்.
சட்டவிரோத சுரங்கங்களில் பங்கஜ் மிஸ்ராவுக்கு தொடர்பு உள்ளது என கூறி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பங்கஜ் மிஸ்ராவின் உறவினர்கள், நண்பர்கள் என பலரது வீடுகள், அலுவலகங்கள் சோதனையிடப்பட்டன. இந்த சோதனை மொத்தம் 18 இடங்களில் நடத்தப்பட்டன. இந்த சோதனையானது ஜார்க்கண்ட், பீகார், தமிழகம், டெல்லி என 4 மாநிலங்களில் நடைபெற்றது.
மேலும் இச் சோதனையில் பங்கஜ் மிஸ்ராவின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் இருந்து ரூ5.32 கோடி பறிமுதல் செய்யபப்ட்டது. மொத்தம் 37 வங்கிக்கணக்குகளில் ரூ11.88 கோடி முடக்கப்பட்டது.பின்னர் பங்கஜ் மிஸ்ராவை இவ்வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
பங்கஜ் மிஸ்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேலும் பல இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 17 முதல் 20 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டன.
இச்சோதனையின் போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன; வங்கி கணக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications