Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சஸ்பென்ஸ் முடிந்தது.. மணிப்பூர் முதல்வராக பைரன் சிங் அறிவிப்பு! 2வது முறையாக பொறுப்பு ஏற்கிறார்!

Subscribe to Oneindia Tamil

மணிப்பூர்: மணிப்பூர் மாநில முதல்வராக பாஜக சார்பில் மீண்டும் பைரன்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.

உத்தர பிரதேசம், ராஜஸ்தான், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்தன.

இதில் உத்தர பிரதேசத்துக்கு மீண்டும் யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநில முதல்வர் பொறுப்பு யாருக்கு வழங்குவது என்பதில் இழுபறி நிலவி வருகிறது.

இதில் உத்தர பிரதேசத்துக்கு மீண்டும் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநில முதல்வர் பொறுப்பு யாருக்கு வழங்குவது என்பதில் இழுபறி நிலவி வந்தது.

மணிப்பூரில் பாஜக

மணிப்பூரில் பாஜக

மணிப்பூரை பொறுத்தமட்டில் பாஜக ஆட்சி நடந்தது. முதல்வராக பைரன்சிங் இருந்தார். 2022 சட்டசபை தேர்தலும் அவர் தலைமையில் தான் பாஜக எதிர்கொண்டது. மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்றது. என்பிபி கட்சி 7, ஐக்கிய ஜனதா தளம் 6, காங்கிரஸ், என்பிபி கட்சிகள் தலா 5, என்பிஏ கட்சி 2, சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதன்மூலம் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.

மும்முனை போட்டி

மும்முனை போட்டி

இதனால் மணிப்பூர் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. குறிப்பாக தற்போதைய முதல்வர் பைரன் சிங், பிஸ்வஜித் சிங் ஆகியோர் இடையே முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியது. இவர்கள் இருவருக்கும் இடையே அதிகார மோதல் தலை தூக்க துவங்கியது. இதற்கிடையே மூன்றாவது நபராக முதல்வர் போட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவோடு யும்னம் கேம்சந்த் சிங் களமிறங்கினார். கடந்த ஆட்சியில் சட்டசபை சபாநாயகராக இருந்த இவர் நேற்று டெல்லி சென்று பாஜக மேலிட தலைவர்களை சந்தித்தார். இதனால் முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் மும்முனை போட்டி நிலவியது.

முதல்வராக பைரன்சிங்

முதல்வராக பைரன்சிங்

அத்துடன் மணிப்பூரில் முதல்வர் பதவியை அலங்கரிப்பது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று மணிப்பூர் மாநிலம் இக்பாலுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ ஆகியோர் சென்றனர். பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தி்ல மணிப்பூர் மாநில முதல்வராக மீண்டும் பைரன் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அவர் 2வது முறையாக மணிப்பூர் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

ஒருமனதாக தேர்வு

ஒருமனதாக தேர்வு

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையி், "மணிப்பூர் முதல்வராக பைரன் சிங் அனைவராலும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்வு மணிப்பூரின் அமைதியையும், பொறுப்பான அரசையும் உறுதி செய்யும். பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக வடகிழக்கு மாநிலங்களின் மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறார்'' என்றார்.

பிஎஸ்எப் முதல் பத்திரிகையாளர் வரை

பிஎஸ்எப் முதல் பத்திரிகையாளர் வரை

முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பைரன் சிங் 1961ல் இம்பாலில் பிறந்தார். இவர் பிஏ பட்டப்படிப்பை மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் முடித்து கால்பந்தாட்ட வீரராக தனது வாழ்க்கையை துவக்கினார். அதன்பின் எல்லை பாதுகாப்பு படையில் (பிஎஸ்எப்) பணியில் சேர்ந்தார். உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்றார். டுராண்ட் கோப்பை போட்டியிலும் பங்கேற்றார். அதன்பிறகு 1992ல் நஹரோல்கி தவ்டாங் பத்திரிகையில் பத்திரிகையாளராக பணியை துவக்கினார். 2001ல் எடிட்டராக மாறினார்.

காங்கிரஸ் கட்சியில்...

காங்கிரஸ் கட்சியில்...

2002ல் அரசியலில் நுழைந்தார். ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சியில் சேர்ந்தார். ஹிங்காங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2003ல் மணிப்பூர் மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக செயல்பட்டார்.
அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2007ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு 2வது முறையாக வெற்றி பெற்றார். அப்போது அவர் நீர்ப்பாசனம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரம் உள்ளிட்ட துறை அமைச்சராக செயல்பட்டார்.

 பாஜகவில் முதல்வர்

பாஜகவில் முதல்வர்

2012 தேர்தலில் ஹிங்காங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 செப்டம்பரில் அவர் முதல்வர் ஒக்ராம் இபேபி சிங்கை எதிர்த்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் 2016 அக்டோபரில் பாஜகவில் இணைந்தார். 2017 தேர்தலில் அதே தொகுதிகளில் போட்டியிட்டு 4வது முறையாக எம்எல்ஏ ஆனார். 2017 மார்ச் 15ல் மணிப்பூர் மாநிலத்தில் முதல் பாஜக முதல்வரானார். தற்போது 2வது முறையாக முதல்வராகி பொறுப்பேற்க உள்ளார்.

18 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசம்

18 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசம்

2022 தேர்தலில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை ரத்து செய்ய விரும்புவதாக பைரன்சிங் கூறினார். இது மக்களிடம் வரவேற்பை பெற்று கொடுத்தது. ஹிங்காங் தொகுதியில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷரத்சந்திர சிங்கை 18 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+