இதுதான் ஒரே குறி.. ரோஹித் கொடுத்த எதிர்பார்க்காத "ஹிண்ட்".. பக்கா திட்டத்தோடு களமிறங்கிய டிராவிட்!
ஜெய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டி பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் ஜெய்ப்பூரில் தொடங்கி உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பவுலிங் செய்து வருகிறது. ரோஹித் சர்மா கேப்டன்சிக்கு கீழ் இந்திய அணியில் கே எல் ராகுல், சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், அக்சர் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாகர், சிராஜ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

வெங்கடேஷ் ஐயர்
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கி உள்ளார். ஐபிஎல் தொடரில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் இவர் கொல்கத்தா அணியில் சிறப்பாக ஆடினார். அதன்பின் சையது முஷ்டாக் அலி தொடரிலும் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக ஆடினார். இவர் பவுலிங்கிலும் அதிக அளவில் நம்பிக்கை அளித்தார்.

வாய்ப்பு
இந்த நிலையில்தான் இந்திய அணிக்குள் அவருக்கு நியூசிலாந்து டி 20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா கேப்டன்சி, ராகுல் டிராவிட் கோச்சிங்கிற்கு கீழ் புதிய சகாப்தம் தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் இந்திய அணியை அடுத்த உலகக் கோப்பை டி 20 தொடருக்கு தயார் செய்வதாக ரோஹித் சர்மா ஹிண்ட் கொடுத்துள்ளார். 2022ல் அடுத்த டி 20 உலகக் கோப்பை நடக்க உள்ளது.

ஹிண்ட்
இதற்கு ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இதை பற்றிதான் இன்று அவர் ஹிண்ட் கொடுத்தார். ரோஹித் சர்மா தனது பேச்சில், நாங்கள் முதலில் பவுலிங் செய்வோம். பிட்ச் நன்றாக உள்ளது. அதிக ஸ்கோர் எடுத்தால் ஆட்டம் விறுவிறுப்பாக செல்லும். நாங்கள் பயிற்சி செய்த போதே இங்கு ட்யூ இருந்தது. அது எங்களுக்கு சாதகமாக இருக்கும்.

வெங்கடேஷ் ஐயர்
அணியில் வெங்கடேஷ் ஐயர் சேர்க்கப்பட்டள்ளார். நாங்கள் மூன்று பாஸ்ட் பவுலர்கள், இரண்டு ஸ்பின் பவுலர்களை வைத்து ஆடுகிறோம். அடுத்த உலகக் கோப்பை மீது நாங்கள் கண் வைத்து இருக்கிறோம். அதற்கு நிறைய நேரம் இருக்கிறது.

கண் வைத்து இருக்கிறோம்
ஆனால் அதுவரை நிறைய ஆப்ஷன்களை முயன்று பார்ப்போம். சில சோதனை முயற்சிகளுக்கான முடிவுகள் உடனடியான வராது. ஆனால் அந்த முயற்சிகளை செய்ய வேண்டியது மிக அவசியம். அதை முயன்று பார்ப்போம், என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார். அதன்படி அடுத்த உலகக் கோப்பை மீது கவனம் செலுத்த போகிறோம் என்று ரோஹித் வெளிப்படையாக அறிவித்து உள்ளார்.

சோதனை முயற்சி
அதுமட்டுமின்றி இந்திய அணியில் சோதனை முயற்சியாக சில விஷயங்களை செய்வோம். சிலவற்றிற்கு உடனே ரிசல்ட் வராது. ஆனால் முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார். இதனால் இந்திய அணியில் ரோஹித் - டிராவிட் முக்கியமான திட்டங்களுடன் இறங்கி உள்ளதாக தெரிகிறது. வரும் நாட்களில் பல இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல் ரவுண்டர்
சோதனை முயற்சியாக பலருக்கும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. முக்கியமாக இந்திய அணி பவுலிங் ஆல் ரவுண்டர்களை களமிறக்கி டெஸ்ட் செய்யும் வாய்ப்பும் உள்ளது. அதேபோல் இந்திய அணியில் சரியான பினிஷர் இல்லை. இதனால் வரும் நாட்களில் இந்திய அணி சில பினிஷிங் வீரர்களை வைத்து சோதனை செய்யும் வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது..
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications