For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளங்கையை வைத்து பார்த்துவிட்டு.. முகத்தை சுளித்த ரோஹித் சர்மா.. அடுத்து நடந்த ட்விஸ்ட்- பின்னணி!

Google Oneindia Tamil News

ராஞ்சி: நியூசிலாந்துக்கு எதிராக இரண்டாவது டி 20 போட்டிக்கு முன்பாக கேப்டன் ரோஹித் சர்மா பிட்சை சோதனை செய்துவிட்டு கொடுத்த ரியாக்சன் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்தியா வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

3 வேளாண் சட்டங்கள் ரத்து; முழுமையாக நீக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்: சட்ட நிபுணர்கள் கருத்து 3 வேளாண் சட்டங்கள் ரத்து; முழுமையாக நீக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்: சட்ட நிபுணர்கள் கருத்து

இதையடுத்து இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது.

சிராஜ்

சிராஜ்

இந்த போட்டியில் இந்திய அணியில் சிராஜ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த போட்டியில் கையில் காயம் ஏற்பட்டது. இடதுகையில் சுண்டு விரலில் சதை கிழிந்தது. இதனால் அங்கு சிராஜுக்கு தையல் போடப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அணியில் ஹர்ஷல் பட்டேல் இடம்பெற்றுள்ளார்.

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூர் அணியில் கலக்கிய ஹர்ஷல் பட்டேல் இன்று முதல்முறையாக இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார். இன்று மைதானத்திற்கு ஆட்டத்திற்கு முன் ரோஹித் சர்மா வந்தார். டாஸ் போடுவதற்கு முன் கேப்டன்கள் பிட்சை சோதனை செய்வது வழக்கம்.

 ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா அதேபோல் பிட்சில் சோதனை செய்து பார்த்தார். பிட்சில் உள்ளங்கையை வைத்து பார்த்தவர் முகத்தை தூக்கி லேசாக சுளித்தார். அதிர்ச்சி அடைந்தது போன்ற ரியாக்சன் கொடுத்தார். மேட்ச் நடக்கும் ராஞ்சி மைதானத்தில் ஏற்கனவே பனி தொடங்கிவிட்டது.

வைரல்

வைரல்

அங்கு 6 மணிக்கே பனி தொடங்கிவிட்டது. இந்த பனி காரணமாக பிட்ச் ஈரமாக இருந்தது. இதனால் இந்திய அணி டாஸ் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. கொஞ்சம் யோசனையாக டாஸ் போட வந்த ரோஹித் சர்மா, ஹெட்ஸ் கேட்டார். அதேபோல் ஹெட்ஸ் விழுந்ததால் அவர் டாஸ் வென்றார்.

Recommended Video

    இது தான் இப்ப சிக்கல்.. Indian Team-ல் செய்ய வேண்டிய மாற்றங்கள்
    ட்விஸ்ட்

    ட்விஸ்ட்

    டாஸ் கொடுத்த ட்விஸ்டால் உற்சாகம் அடைந்த ரோஹித் சர்மா எதிர்பார்த்தபடியே பவுலிங் தேர்வு செய்தார். இதில் முதலில் களமிறங்கும் அணி குறைந்தது 180 ரன்களாவது எடுக்க வேண்டும். போக போக பனி இன்னும் அதிகரிக்கும். இதனால் பேட்டிங் செய்வது எளிதாகும். எனவே சேசிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.

    English summary
    Ind vs NZ: Rohit Sharma's reaction after checking Ranchi's pitch goes viral on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X