ராகுல் டிராவிட் உடனே சுதாரிக்கணும்.. முக்கியமான விஷயத்தில் திணறிய இந்திய வீரர்கள்.. ஒரே குழப்பம்!
ஜெய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் கொஞ்சம் சொதப்பலாக இருந்தது. இதற்கு பின் சில காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
நியூசிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் ஜெய்ப்பூரில் தொடங்கி உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பவுலிங் செய்து வருகிறது. ஆரம்பத்திலேயே டார்லி மிட்சல் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அதன்பின் சுதாரித்து வேகம் காட்டி வருகிறது.

டிராவிட்
இன்றைய பேட்டியில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி இதுவரை சிறப்பாகவே இருந்துள்ளது. அவரின் பீல்டிங் செட்டப் நன்றாக இருந்தது. அதேபோல் ஓவர் ரொட்டேஷனும் சிறப்பாக இருந்தது. ஆனால் பீல்டர்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை.

மிஸ்
நிறைய இடங்களில் பீல்டர்கள் மோசமாக செயல்பட்டனர். சிங்கிள் போக வேண்டிய இடத்தில் மோசமாக பீல்டிங்கால் இரண்டு ரன்கள் சென்றது. அதேபோல் சிங்கிளை தடுக்க வேண்டிய சில இடங்களில் பீல்டர்கள் திணறினார்கள். இந்திய அணியின் பீல்டிங்கை ரசிகர்கள் பலர் ட்வீட்டரில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

காரணம்
முக்கியமாக ரோஹித் சர்மாவும் கூட ரன் அவுட் செய்ய முடியாமல் விக்கெட் ஒன்றை மிஸ் செய்தார். சாப்மேன் 14 ரன்கள் இருந்த போதே ரோஹித் சர்மா அவரை ரன் அவுட் செய்திருக்க முடியும். ஆனால் ரோஹித் சர்மா டைரக்ட் ஹிட் அடிக்க முடியாமல் மிஸ் செய்தார். இதன்பின் சாப்மேன் 63 ரன்கள் வரை எடுத்தார். இந்திய வீரர்களின் பீல்டிங் இன்று கொஞ்சம் சொதப்பலாகவே இருந்தது.

யார்
ராகுல் டிராவிட் ஒரு கோச்சாக உடனே சுதாரித்து பீல்டிங்கில் பயிற்சிகளை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சாஸ்திரிக்கு கீழ் ஆர் ஸ்ரீதர் பீல்டிங் கோச்சாக இருந்த போது இந்திய அணியின் பீல்டிங் மிக சிறப்பாக இருந்தது. ஆனால் இப்போது முதல் போட்டியிலேயே அவர் இல்லாமல் இந்திய அணி பீல்டிங்கில் திணறுகிறது. இந்திய அணியின் பீல்டிங் கோச்சாக டி திலீப் செயல்பட்டு வருகிறார்.

கோச்
பவுலிங் கோச்சாக பராஸ் பாம்ப்ரே, பேட்டிங் கோச்சாக விக்ரம் ரதஹதோர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு இன்னும் பிசிசிஐ சார்பாக அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இவர்களின் பதவி ஏற்பு உறுதியாகவில்லை. வரும் நாட்களில் இவர்கள் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு கூட உள்ளது.

மாற்றம்
இவர்களின் செயல்பாட்டை வைத்து இவர்களுக்கான பதவி குறித்து பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவிக்கும். இந்த நிலையில்தான் பீல்டிங் கோச்சாக டி திலீப் முதல் நாளே கொஞ்சம் விமர்சனங்களை சந்தித்துள்ளார். அடுத்த போட்டியில் இவர் அணியின் பீல்டிங்கில் நிறைய மாற்றங்களை கொண்டு வர வேண்டிய நிலையில் உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications