போரை விரும்பியதும் இல்லை; வலிமையை காட்ட தயங்கியதும் இல்லை.. இதுதான் இந்தியா - பிரதமர் மோடி பேச்சு
கார்கில்: "இந்தியா போரை விரும்பும் நாடு கிடையாது என்பது உண்மைதான்; ஆனால் அதன் சுயமரியாதையை யாரேனும் சீண்டிப் பார்த்தால் தனது வலிமையை காட்டவும் இந்தியா தயங்கியது கிடையாது" என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பின்னர், அவர்களுக்கு மத்தியில் ஆற்றிய உரையில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார்.
இன்று இந்திய ராணுவத்தின் பலத்தை கண்டு உலகமே வியப்பதாக கூறிய மோடி, சில நாடுகளுக்கு இந்திய ராணுவத்தின் அசுர வளர்ச்சி ஒருவித அச்சத்தை கொடுப்பதாகவும் கூறினார்.

கார்கிலில் பிரதமர் மோடி
தீபாவளி பண்டிகையை ஒட்டி கார்கிலுக்கு இன்று சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள நமது ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினார். பிரதமரின் வருகையால் அங்குள்ள ராணுவ வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த 2014ஆம் பிரதமராக பொறுப்பேற்றது முதலாக ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரதமர் மோடி. கடந்த காலங்களில் சியாச்சின், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி, இந்த ஆண்டு கார்கில் சென்றிருக்கிறார்.

வலிமையை உணர்த்திய கார்கில்
கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, அவர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்த ஆண்டு தீபாவளியை உங்களுடன் (ராணுவ வீரர்கள்) கொண்டாடுவது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அதுவும் கார்கிலில் தீபாவளி கொண்டாடப்படுவது சில விஷயங்களுடன் நன்றாக பொருந்துகிறது. நரகாசுரன் என்ற அரக்கனை வதை செய்ததை கொண்டாடுவதே தீபாவளி ஆகும். அதேபோல, எதிரி நாட்டின் ஆக்கிரமிப்பையும், அவை ஏவிவிட்ட தீவிரவாதத்தையும் அடியோடு வீழ்த்திய இடம் கார்கில். எதிரிக்கு மட்டுமல்லாமல் இந்த உலகுக்கே இந்தியாவின் வலிமையை உணர்த்திய இடமாகன கார்கிலில், இன்று தீபாவளி கொண்டாடுவது தனிச்சிறப்பாக இருக்கிறது.

ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது
ஒரு நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு அதன் எல்லை பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், எங்கள் நலனுக்காக நீங்கள் தூக்கத்தையும், குடும்பத்தையும் தியாகம் செய்துவிட்டு எல்லையை பாதுகாக்கிறீர்கள். இதற்காக இந்திய மக்கள் சார்பில் உங்களுக்கு தலை வணங்குகிறேன். இந்திய ராணுவத்தின் தீரத்தை சமீபகாலமாக உலக நாடுகள் பார்த்து வருகிறது. நம்மை சுற்றிலும் எதிரிகள் உள்ள போதிலும், ஒரு கைப்பிடி மண்ணை கூட அவர்களால் எடுத்துச் செல்ல முடியவில்லை. உயிரே போனாலும் தாய் மண் மீது எதிரிகளின் கால் பட நம் ராணுவ வீரர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

வலிமை இல்லாமல் அமைதி இல்லை
இன்று இந்திய ராணுவம் அசுர பலத்துடன் உள்ளது. ஆள் பலத்திலும் சரி; ஆயுத பலத்திலும் சரி.. உலக வல்லரசுகளுக்கு நிகரான பலத்துடன் நம் இந்திய ராணுவம் விளங்குகிறது. ஒருகாலத்தில், மற்ற நாடுகளிடம் இருந்து இந்தியா ஆயுதங்களையும், ராணுவத் தளவாடங்களையும் எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால் இன்று, மற்ற நாடுகள் நம்மிடம் இருந்து ஆயுதங்களை வாங்கிச் செல்கிறது. இதுதான் உண்மையான வளர்ச்சி. இதுதான் புதிய இந்தியா. இந்த வளர்ச்சியே போதும் என நாம் நின்றுவிடக் கூடாது. இனிதான் வீறு கொண்டு முன்னேற வேண்டும். இந்திய ராணுவத்தின் பலத்தை இன்னும் பல மடங்கு பெருக்க வேண்டும். ஒரு நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்றால், அந்த நாடு பலசாலியாக இருக்க வேண்டும். வலிமை இல்லாமல் ஒரு நாட்டில் அமைதி நிலவ சாத்தியமில்லை.

அஞ்சி நடுங்கும் எதிரிகள்..
இன்று இந்தியாவுக்கு வெளியே இருக்கும் எதிரிகளும், உள்ளே இருக்கும் எதிரிகளும் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். வெளியே உள்ள எதிரிகள், ராணுவ வீரர்களான உங்களை கண்டு அஞ்சுகின்றனர். உள்ளே இருக்கும் எதிரிகளான நக்சல் தீவிரவாதிகளும், பிற பயங்கரவாத அமைப்புகளும் இந்திய அரசை கண்டு பயப்படுகின்றன. தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை அடியோடு ஒழிப்பது என்ற கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது. ஒருகாலத்தில், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நக்சல் கட்டுப்பாட்டில் இருந்தன. இன்று ஒருசில மாவட்டங்களில் கூட நக்சல்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

"போரை விரும்ப மாட்டோம், ஆனால்.."
இந்தியா எப்போதுமே தனது வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தும். பிற நாட்டு விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடாது. அதேபோல, போரை என்றுமே இந்தியா விரும்பியதில்லை. ஆனால், இதை சாதகமாக எடுத்துக்கொண்டு யாரேனும் நமது சுயமரியாதையையும், இறையாண்மையும் சீண்டிப் பார்த்தால் அவர்களுக்கு தனது வலிமையை காட்டவும் இந்தியா தயங்கியதில்லை. இதுதான் இந்தியாவின் வரலாறு. இந்தியாவின் இறையாண்மையை சீண்டி பார்த்த சில நாடுகளுக்கு இந்த உண்மை தெரியும். இந்தியாவுக்கு போர் என்றைக்கும் முதல் தேர்வாக இருந்தது கிடையாது. ஆனால் கடைசி தேர்வாக போரை கையில் எடுக்க இந்தியா தயங்கியதும் கிடையாது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications