பாதுகாப்பு துறையில் அசத்தும் இந்தியா.. அப்படியே பம்பும் பாகிஸ்தான்! கைக்கு கிடைத்த முக்கிய ஆயுதம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாதுகாப்பு துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த வகையில், MIRV தொழில்நுட்பம் கொண்ட மேம்பட்ட அக்னி-5 ஏவுகணை தற்போது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டிருக்கிறது.

மே.8ம் தேதி, ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து, MIRV தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.

India

MIRV தொழில்நுட்பம் என்றால் என்ன?

வழக்கமான ஏவுகணைகள் தெரியும். ஆனால், MIRV தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணை இதிலிருந்து வித்தியாசமானது. சாதாரண ஏவுகணைகள் ஒரு ஏவுகணைக்கு ஒரு வெடிபொருள் என்ற கணக்கிலேயே இயங்கும். ஆனால் MIRV தொழில்நுட்பம் என்பது, ஒரு ஏவுகணைக்குள் பல அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று, வெவ்வேறு திசைகளில் உள்ள வெவ்வேறு இலக்குகளைத் தனித்தனியாகத் தாக்கும் திறன் கொண்டது.

எதிரி நாடுகளின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளால் ஒரே நேரத்தில் வரும் பல வெடிபொருட்களைத் தடுப்பது மிகவும் கடினம். இது இந்தியாவின் தாக்குதல் திறனைப் பன்மடங்கு அதிகரிக்கிறது.

அக்னி-5 ஏவுகணையின் சிறப்பம்சங்கள்

இந்த ஏவுகணை, 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும். இது ஆசியா முழுவதையும், ஐரோப்பாவின் சில பகுதிகளையும் எட்டும் திறன் கொண்டது.

அதாவது, ஆசியாவில், சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய், ஹாங்காங், மற்றும் குவாங்சூ ஆகிய நகரங்களையும், ரஷ்யாவின் மாஸ்கோ மற்றும் பிற முக்கிய நகரங்களையும், ஜப்பானின் டோக்கியோ, தென்கிழக்கு ஆசியாவில் ஜகார்த்தா (இந்தோனேசியா), மணிலா (பிலிப்பைன்ஸ்), பாங்காக் (தாய்லாந்து), மத்திய கிழக்கு நாடுகளில் தெஹ்ரான் (ஈரான்), துபாய் (யுஏஇ), ரியாத் (சவுதி அரேபியா) ஆகிய நகரங்களை இந்த ஏவுகணையால் தாக்க முடியும்.

அதேபோல ஐரோப்பாவின் ஒரு கணிசமான பகுதி இந்த ஏவுகணையின் தாக்குதல் எல்லைக்குள் வருகிறது. அதாவது, உக்ரைனின் கீவ், துருக்கியின் இஸ்தான்புல் மற்றும் அங்காரா, கிரீஸின் ஏதென்ஸ், ஜெர்மனியின் பெர்லின், இத்தாலியின் ரோம், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஹெல்சின்கி மற்றும் ஸ்டாக்ஹோம், ஆப்பிரிக்காவின் எகிப்து (கெய்ரோ), லிபியா மற்றும் சூடான் போன்ற வட ஆப்பிரிக்க நாடுகள் இந்த ஏவுகணையின் வரம்பிற்குள் உள்ளன.

இந்த ஏவுகணை மூன்று நிலைகளைக் கொண்ட திட எரிபொருள் மூலம் இயங்குகிறது. இதை ஒரு பெட்டி போன்ற அமைப்பிற்குள் வைத்து சாலை வழியாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இது மிகக் குறுகிய காலத்தில் ஏவுகணையைத் தயார் செய்து ஏவ உதவுகிறது. இதில் உள்ள உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நேவிகேஷன் மற்றும் சென்சார் அமைப்புகள் மிகத் துல்லியமான இலக்கை உறுதி செய்கின்றன.

இந்தியாவின் அணுசக்தி கொள்கை

இந்தச் சோதனை இந்தியாவின் முதலில் பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கையை உறுதிப்படுத்துகிறது. இந்தியா எந்த நாட்டின் மீதும் முதலில் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தாது. ஆனால், ஒரு நாடு இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தினால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க இந்தியாவிடம் நிலம், நீர் மற்றும் ஆகாயம் ஆகிய மூன்றிலிருந்தும் ஏவக்கூடிய வலிமையான ஆயுதங்கள் உள்ளன என்பதை இது நிரூபிக்கிறது.

சோதனையின் முக்கியத்துவம்

உலக அளவில் மிகச் சில நாடுகளிடம் மட்டுமே (அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன்) இந்த MIRV தொழில்நுட்பம் உள்ளது. இப்போது அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. டி.ஆர்.டி.ஓ (DRDO) மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையினரால் இந்த ஏவுகணையை நாம் உருவாக்கியிருக்கிறோம். இது இந்தியாவின் பாதுகாப்புத் துறை சுயசார்பு அடைந்துள்ளதைக் காட்டுகிறது.

அதேபோல அண்டை நாடுகளிடமிருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இந்த ஏவுகணை ஒரு சிறந்த தடுப்பு அரணாக விளங்கும். குறிப்பாக பாகிஸ்தானிடமிருந்து வரும் அச்சறுத்தல்கள் குறையும் என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+